நீங்க கேள்விப்பட்டது 'உண்மை' தான்...! 'போதும், முடிச்சுக்கலாம்...' 'மனம்' கலங்கி எலான் மஸ்க் எடுத்த 'அதிரடி' முடிவு...! 'ஸ்ட்ரெஸ்' ரொம்ப அதிகமா இருக்கு...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களின் பட்டியலில் இருக்கும் எலான் மஸ்க் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த விஷயத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.
எலான் மஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தவர். அவர் கிரிம்ஸ் என்பவரை காதலித்து வந்ததோடு, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் சமீபத்தில் பிறந்தது.
இந்நிலையில், இந்த காதல் ஜோடிகள் தற்போது பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர், ' நானும் என் காதலி கிரிம்ஸும் கிட்டத்தட்ட பிரிந்துவிட்டோம். நாங்கள் பிரிந்தாலும் எங்களுக்குள் இருக்கும் அந்த உறவும், காதலும் அப்படியே தான் இருக்கிறது. எங்களுடைய ஒரு வயது ஆண் குழந்தையை நாங்கள் இருவருமே சேர்ந்து வளர்க்க உள்ளோம்.
நான் பெரும்பாலும் என்னுடைய வேலையிலேயே நேரத்தை செலவிடுகிறேன். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் பணிச்சுமை அதிகமாக உள்ளது.
என்னுடைய காதலி லாஸ் ஏஞ்சல்ஸில் வேலை செய்கிறார். இப்போது என்னுடன் இருப்பதால் மட்டுமே சிறிது நேரம் செலவிட முடிகிறது. நாங்கள் பிரிந்தாலும் எங்கள் உறவும் காதலும் அப்படியே தொடரும்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்