ஆறு மாசமா 'நடந்த விஷயத்தை' யார்கிட்டேயும் சொல்லல...! 'எல்லாம் தெரிஞ்சே தான் பண்ணியிருக்காரு...' - பதறிப்போன மருத்துவர்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றில் இருந்து செல்போன் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் உள்ள அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட்டுள்ளார். மருத்துவர்கள் அவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது அவரது வயிற்றில் மொபைல் போன் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட நபரிடம் கூறிய போது அவர் எந்த வித அதிர்ச்சியும் அடையாமல் இருந்துள்ளார். அந்த இளைஞர் தெரிந்தே தான் மொபைல் போனை விழுங்கியுள்ளார். மேலும், சில நாட்களில் போன் தானாகவே வெளியே வந்து விடும் என நினைத்து அப்படியே விட்டுள்ளார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் போன் வெளியே வரவில்லை, அவருக்கு வயிற்று வலி தான் வந்தது. அதன்பின் உடனடியாக பாதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்த மருத்துவக்குழு நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு, வயிற்றில் உள்ள மொபைல் போனை தனியாக எடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கூறிய மருத்துவர்கள், 'செல்போனை விழுங்கிய நபர் இயற்கையாகவே மொபைல் போன் தனது உடலில் இருந்து வெளியேறும் என்று நம்பினார். இப்போதும் அவர் கடும் வயிற்று வலி ஏற்பட்ட பிறகே அந்த நபர் எங்களின் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
ஆறு மாத காலம் மொபைல் போன் அவர் வயிற்றில் இருந்ததால் குடலில் அந்த நபருக்கு அதிகப்படியான தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. பிறகு அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு தற்போது அந்த நபர் நலமாக உள்ளார்' என தெரிவித்துள்ளனர்.
மேலும், அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அஷ்ரப் மாபாத் கூறும் போது, 'பாதிக்கப்பட்ட நோயாளியின் வயிற்றில் இருந்த செல்போன் அவர் சாப்பிடும் உணவை ஏற்றுக்கொள்ளவில்லை. நாளடைவில் வயிற்றில் தொற்று ஏற்பட காரணமாக அமைந்தது. அவர் விழுங்கிய உடனேயே மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருந்தால் இவ்வளவு அவஸ்தைகளை சந்தித்திருக்கமாட்டார்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்