‘இப்படியும் ஒரு பொண்ணா?’.. ஆச்சர்யப் பட வைக்கும் இளம் பெண்ணின் செயல்!.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவில் இளம்பெண் ஒருவர் குதிரையைப் போல் தடுப்புக் கட்டைகளை தாண்டிக் குதிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

‘இப்படியும் ஒரு பொண்ணா?’.. ஆச்சர்யப் பட வைக்கும் இளம் பெண்ணின் செயல்!.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

கனடாவின் Edmontonaஐ சேர்ந்த Ava Vogel என்கிற பெண் நம்பமுடியாத வகையில் குதிரையைப் போலவே செயல்பட்டு வருகிறார். அதற்கான பயிற்சியை அவர் எவ்வாறு எடுத்துள்ளார் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அவர் பேசும்போது ஆறு வருடங்களுக்கு முன்பாகவே குதிரையின் அசைவுகளை குறித்த பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் மூன்று வருடங்களுக்கு முன்பு குதிரை போலவே தாவி பழகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குதிரைகளின் வீடியோ மூலமும், அவற்றின் மீது சவாரி செய்தும் குதிரைகளின் பழக்கங்களை தெரிந்துகொண்டு முடிந்தவரை ஒரு குதிரையை பிரதிபலிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மற்ற செய்திகள்