'மண்டையை' பிளந்து நடக்கும் 'ஆபரேஷன்' ஒருபுறம்!.. இன்னொருபுறம் 'கூலாக' மூதாட்டி பார்த்த 'வேலை'!.. வைரல் ஆகும் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > உலகம்60 வயதான மூதாட்டிக்கு மருத்துவர்கள் மூளை ஆபரேஷன் செய்யும்போது அந்த மூதாட்டி சமையல் செய்துகொண்டிருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் வசிக்கும் மூதாட்டி ஒருவருக்கு உடல் பாகங்கள் செயலிழக்க வாய்ப்பிருந்ததால், மூளையின் செயல்பாடுகளை ஆய்வு செய்துகொண்டே சிகிச்சை மெற்கொள்வதற்காக, அறுவை சிகிச்சை நடக்கும் நேரத்தில் இத்தாலியின் பிரபலமான அஸ்கோலி ஆலிவ்களை ஒரு மணி நேரத்தில் 90 என்கிற அளவில் தயாரித்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் மருத்துவர்கள் தலையைப் பிளந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கும் நேரத்தில், ஒரு பக்கம் மூதாட்டி உணவுகளை தயார் செய்துகொண்டிருக்கிறார். இதனை பார்த்த பலரும் மூதாட்டியின் மன உறுதியை பாராட்டியுள்ளனர்.
இதுபற்றி நரம்பியல் மருத்துவர் ராபர்ட்டோ திரிக்னனி கூறுகையில், “நான் இதேபோல் 60 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டிருக்கிறேன். தற்போது மூதாட்டியின் உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்