'இதுக்கு மேல ஒரு நொடி கூட பொறுக்க முடியாது!' - அவசர அவசரமாக மலேசிய அரசு எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை, மூன்று மாதங்களுக்கு முன்னர் 15 ஆயிரமாக இருந்தது.

'இதுக்கு மேல ஒரு நொடி கூட பொறுக்க முடியாது!' - அவசர அவசரமாக மலேசிய அரசு எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!

இந்நிலையில் அந்நாட்டில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில்  மழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மலேசியாவின் மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, பிரதமர் முஹிதின் விடுத்த கோரிக்கையை ஏற்று, நேற்று அவசர நிலை பிறப்பித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து முஹிதின் டிவியில் தன் நாட்டு மக்களிடம் கூறியதாவது, ராணுவ ஆட்சி, நாட்டின் அவசர நிலையின் போது  அமல்படுத்தப்பட மாட்டாது. மக்களுக்கு என் தலைமையிலான அரசு தொடர்ந்து  சேவை செய்யும். மேலும் மாநில சட்டசபைகள் மற்றும் பார்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட்1 அல்லது அதற்கு முன் வரை நிலைமையை பொறுத்து நாட்டில் அவசர நிலை அமலில் இருக்கும். அதுநாள் வரை பொதுத் தேர்தல் நடக்காது என அவர் பேசினார்.

Due to virus surge Malaysia declares state of emergency

முஹிதின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்சிக்கு வந்தார். இந்நிலையில் எதிர்கட்சிகள் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்  என முஹிதினுக்கு நெருக்கடி கொடுத்து வந்தன.

ALSO READ:  “அப்படி பேசுன நானே ஏன் புகார் கொடுத்தேன்னா”.. “என்ன மாரி நிறைய பொண்ணுங்க குமுறிட்டு இருக்காங்க.. பெரிய லிஸ்டே இருக்கு!”.. 'YouTube' வைரல் பெண் 'கண்ணீர்' பேட்டி! வீடியோ!

மேலும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த, ஐக்கிய மலாய் தேசிய கட்சியும் ஆதரவை வாபஸ் பெறுவதாக மிரட்டல் விடுத்து வந்தது. இதனால் முஹிதின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாட்டில் தற்போது அவசர நிலையை, முஹிதின் அமல்படுத்தி உள்ளதால், தனது பதவியை அவர் தற்காலிகமாக தக்க வைத்து உள்ளார்.

மற்ற செய்திகள்