"அதிர்ஷ்டம் கூரை'ய பிச்சுக்கிட்டு தாறுமாறா குடுத்து இருக்கே.." 3 வாரத்துல ரெண்டு தடவ.. தமிழருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்..
முகப்பு > செய்திகள் > உலகம்துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் லாட்டரி டிக்கெட் வாங்கும் நபர்களுக்கு எதிர்பாராத நேரத்தில், கூரையை பிய்த்துக் கொண்டு பணம் கொட்டும் விஷயத்தை நாம் இணையத்தில் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.
அது மட்டுமில்லாமல், வெளிநாடுகளில் வேலைக்காக சென்று தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வரும் தமிழ் மக்களுக்கும், சில சமயம் வேறு நாடுகளில் லாட்டரி அதிர்ஷ்டம் கைக்கூடி, அவர்களை லட்சாதிபதி ஆக்கும் செய்திகளையும் நாம் கடந்து வந்திருப்போம்.
இந்நிலையில், துபாயில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு, வேற லெவலில் அடித்த அதிர்ஷ்டம், பலருக்கும் வியப்பை ஏறப்டுத்தி உள்ளது.
பொழிந்த பண மழை
துபாயில் வசித்து வரும் மனோஜ் மதுசூதனன் என்பவர், அங்குள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அங்கே லாட்டரி டிக்கெட்டை அடிக்கடி வாங்கும் பழக்கத்தை உடையவர் என்றும் கூறப்படுகிறது. அப்படி கடந்த மூன்று வாரங்களுக்கு இவருடைய லாட்டரி டிக்கெட்டிற்கு, எமிரேட்ஸ் டிராவில் பெரிய பரிசு ஒன்று விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி இருக்கையில், மூன்று வாரங்கள் கழித்து மீண்டும் மதுசூதனன் எடுத்த லாட்டரிக்கு Dirham 77,777 (இந்திய மதிப்பில் சுமார் 17 லட்ச ரூபாய்) பரிசு விழுந்துள்ளது. எமிரேட்ஸ் டிராவில் ஏழு இலக்கங்களில் ஐந்து இலக்கங்கள் பொருந்தி இருந்ததால் அசத்தல் பரிசினை மதுசூதனன் தட்டிச் சென்றார்.
மூணு வாரத்துல ரெண்டு தடவ..
வெறும் மூன்றே வார இடைவெளியில், மிக பெரிய பரிசுத் தொகையை வென்ற மனோஜ் மதுசூதனன் மீது கடும் பண மழை பொழிந்துள்ளது. இதுகுறித்து பேசும் மதுசூதனன், "நான் வெற்றி பெற்றதை உறுதி செய்த பின், சிறு குழந்தை போல சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தேன். ஏனென்றால், மீண்டும் இவ்வளவு சீக்கிரம் நான் பெரிய பரிசு வெற்றி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை.
நான் வெற்றி பெற்ற பரிசுத் தொகையைக் கொண்டு, உதவி தேவைப்படும் மக்களுக்கு என்னாலான உதவியை செய்வேன். அதே போல, தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்யவுள்ளேன். தொடர்ந்து, லாட்டரி குலுக்கலில் நான் பங்கு கொள்ள அதிக உத்வேகத்துடன் உள்ளேன். யாருக்கு தெரியும், நான் மீண்டும் கூட வெற்றி பெறலாம்" என மனோஜ் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்