துபாயில் நடைபெற்ற வாகன உரிமங்களுக்கான ஏலத்தில் ஒரு குறிப்பிட்ட நம்பர் பிளேட்டை 35 மில்லியன் திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் 73 கோடி) கொடுத்து ஒருவர் வாங்கியுள்ளார். இதுதான் இப்போது உலகம் முழுவதும் டாக் ஆஃ த டவுன்.
Also Read | உலகின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்.. யம்மாடி இவ்வளவு வயசா?
துபாய் அரசர்
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் சமயத்தில் உலகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு அளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறார் துபாயின் அரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம். அதன்படி, இந்த வருடத்தில் உலகம் முழுவதும் உள்ள 100 கோடி மக்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தை துபாய் அரசர் அறிவித்திருந்தார். இதற்கு நிதி திரட்டும் நோக்கில் சமீபத்தில் வாகன உரிமங்களுக்கான பிரத்தியேக ஏலம் நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த ஏலத்திற்கு வந்த நம்பர் பிளேட்டுகள் கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ளன.
73 கோடி
துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், அபுதாபி காவல்துறை மற்றும் எமிரேட்ஸ் ஏல நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த பிரத்தியேக ஏலத்தை நடத்தினர. இதில் AA8 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட் 35 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு ஏலம் போனது.
அதே போல F55 மற்றும் V66 என்ற இரு நம்பர் பிளேட்களும் தலா 4 மில்லியன் திர்ஹம்ஸ்களுக்கும், Y66 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட் 3.8 மில்லியன் திர்ஹம்ஸ்களுக்கும் ஏலத்தில் வாங்கப்பட்டிருக்கிறது.
உலகின் மிக விலை உயர்ந்த நம்பர் பிளேட்
இதுவரை உலகின் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட நம்பர் பிளேட் F1 தான். 1904 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் பதிவு செய்யப்பட்ட இந்த நம்பர் பிளேட்டை புகழ்பெற்ற கார் டிசைனர் அஃப்சல் கான் கடந்த 2008 ஆம் ஆண்டு வாங்கினார். இதன் விலை 45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 345 கோடி) ஆகும்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்