'மருத்துவ பில்' மொத்தம் 1.50 'கோடி'... "அட அத ஒன்னும் கட்ட வேணாம், விடுங்க"... இந்தியரை நெகிழ வைத்த 'துபாய்' ஹாஸ்பிட்டல்!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்தவர் ராஜேஷ் லிங்கய்யா ஒட்னாலா. 42 வயதான இவர் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில், இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

'மருத்துவ பில்' மொத்தம் 1.50 'கோடி'... "அட அத ஒன்னும் கட்ட வேணாம், விடுங்க"... இந்தியரை நெகிழ வைத்த 'துபாய்' ஹாஸ்பிட்டல்!!!

தொடர்ந்து, சிகிச்சைக்கு வேண்டி ராஜேஷ் லிங்கய்யா, துபாயிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 80 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குணமடைந்துள்ளார். இதில், அவரது 80 நாட்களுக்கான ஒட்டுமொத்த மருத்துவமனை பில் 762,555 திர்ஹாம்ஸை தொட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில், சுமார் 1.50 கோடிக்கு மேல் ஆகும்.

குணமடைந்த பின்னர், ராஜேஷ் லிங்கய்யா இந்தியா செல்ல விருப்பப்பட்டுள்ளார். ஆனால், அவரால் அத்தனை பெரிய தொகையான மருத்துவமனை கட்டணத்தை கட்ட முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில், மருத்துவமனை கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டுமென இந்திய தூதரகம் துபாய் மருத்துவமனைக்கு கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதத்தில், 'ராஜேஷ் குணமடைந்து விட்ட நிலையில் அவர்கள் இந்தியா திரும்ப விருப்பப்படுகின்றனர். ஆனால் அவரது பொருளாதார சூழல் காரணமாக மருத்துவமனை கட்டணத்தை கட்ட முடியவில்லை' என குறிப்பிட்டிருந்தது.

இதன் காரணமாக, எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்காமல் ராஜேஷை மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்துள்ளது. இது பற்றி இந்திய தூதரக பிரதிநிதி, 'மனிதாபிமான அடிப்படையில் இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்ததற்காக துபாய் சுகாதார நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என கூறியுள்ளார்.

ராஜேஷ் லிங்கைய்யாவும் அவரது குடும்பத்தினரும் இந்தியா செல்வதற்காக இந்திய தூதரகம் சார்பில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இலவச டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன் இந்தியா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்