cadaver Mobile Logo Top
Viruman Mobiile Logo top

கூட்டமான மெட்ரோ ரயிலில் Casual உடையுடன் பயணம் செஞ்ச துபாய் இளவரசர்.. யாருமே கண்டுபிடிக்கலையாம்.. வைரலாகும் புகைப்படம்..அதுவும் எதுல தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துபாயின் இளவரசர் லண்டன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கூட்டமான மெட்ரோ ரயிலில் Casual உடையுடன் பயணம் செஞ்ச துபாய் இளவரசர்.. யாருமே கண்டுபிடிக்கலையாம்.. வைரலாகும் புகைப்படம்..அதுவும் எதுல தெரியுமா?

Also Read | களவுபோன நகைகள்.. திருடுனவரை கண்டுபிடிக்க மந்திரவாதியை அழைத்த ஹவுஸ் ஓனர்.. நடு இரவுல கேட்ட பயங்கர சத்தம்..!

ஷேக் ஹம்தான்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்-ன் மூத்த மகன் தான் ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம். இவர் துபாயின் பட்டத்து இளவரசராகவும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவராகவும் இருக்கிறார். பொதுமக்களிடத்தில் எப்போதும் அன்பாக பழக்கூடியவரான ஹம்தான் சமூக வலை தளங்களிலும் துடிப்புடன் இயங்க கூடியவர். சாகச பிரியரான இவர் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா மீது ஏறி செல்பி எடுப்பது, ஆழ்கடலில் நீச்சலடித்து போன்றவற்றை செய்வது மட்டுமல்லாமல் அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களிலும் வெளியிடுவார். இதனாலேயே இவருக்கு 14.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்.

Dubai Crown Prince Goes Unnoticed While Travelling In London Tube

பிரிட்டனில் பட்டப்படிப்பு முடித்தவரான ஷேக் ஹம்தான் துபாயின் துணை ஆட்சியாளராக இருந்திருக்கிறார். பொதுவாக அந்த நாட்டு மக்கள் அவரை Fazza என்று அன்புடன் அழைக்கிறார்கள். Fazza என்றால் அரபி மொழியில் அனைவருக்கும் உதவுபவர் என்று பொருளாம்.   துபாயின் இளவரசராக பிசியாக வலம்வரும் இவருக்கு குதிரை பந்தயங்களில் ஈடுபடுவது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. பல குதிரை பந்தயங்களில் ஜாக்கியாக இறங்கி வெற்றியும் பெற்றிருக்கிறார் ஹம்தான்.

சுற்றுலா

எப்போதும் புடைசூழ இருக்கும் ஹம்தான் சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு தனது நண்பருடன் மெட்ரோவில் சாதாரண உடையில் நின்றபடி பயணம் செய்திருக்கிறார். சக பயணிகளாலும் அவரை அடையாளம் காணமுடியவில்லை எனத் தெரிகிறது. அப்போது ஷேக் ஹம்தான் தான் செல்பியை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

Dubai Crown Prince Goes Unnoticed While Travelling In London Tube

தனது நண்பர் பத்ர் அதீஜ் உடன் எடுத்துக்கொண்ட செல்பியை பகிர்ந்திருக்கும் அவர்,"நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது, பத்ர் ஏற்கனவே சலிப்படைந்துவிட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Fazza (@faz3)

Also Read | "வீட்டு வாசனை பிடிக்கலயாம்".. Advance-ல ₹20 ஆயிரம் Cut பண்ண ஹவுஸ் ஓனர்! Tenant சொன்ன காரணங்களை கேட்டு தல சுத்தி போன நெட்டிசன்கள்

DUBAI, DUBAI CROWN PRINCE, TRAVEL, LONDON TUBE

மற்ற செய்திகள்