VIDEO : கொரோனாவுக்கு எதிராக களம் கண்ட 'மோப்ப' நாய்கள்... "இனி 'கொரோனா' டெஸ்ட் எடுத்த சில நிமிஷத்துலயே 'ரிசல்ட்' தெரிஞ்சிடுமாம்"!!!... அசத்தல் 'ஐடியா'வை கையில் எடுத்த 'நாடு'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், நாள்தோறும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

VIDEO : கொரோனாவுக்கு எதிராக களம் கண்ட 'மோப்ப' நாய்கள்... "இனி 'கொரோனா' டெஸ்ட் எடுத்த சில நிமிஷத்துலயே 'ரிசல்ட்' தெரிஞ்சிடுமாம்"!!!... அசத்தல் 'ஐடியா'வை கையில் எடுத்த 'நாடு'!!!

இந்நிலையில், ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அவரது சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா இருக்கிறதா என சோதனைக்கு உட்படுத்தப்படும். சோதனை முடிவுகள் வெளியாக சுமார் ஒரு நாள் வரை ஆகலாம். ஆனால், சில தினங்களுக்கு முன் ஜெர்மனியில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் சில நிமிட துளிகளில் ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியலாம் என ஆய்வு முடிவுகள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது துபாய் விமான நிலையத்தில், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க போலீஸ் மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. விமான நிலையம் வரும் நபர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு தனி அறையில் வைக்கப்படும். அப்போது, அதில் நீட்டி விற்கப்படும் குழாய் வழியாக அதனை நாய் மோப்பம் பிடிக்கும் நிலையில், ஒருவருக்கு கொரோனா இருந்தால் அடையாளம் காட்டி விடுகின்றன.

அதே போல, மோப்ப சக்தி மூலம் கொரோனா இருக்கும் என நாய் மூலம் நிரூபணம் செய்யப்பட்ட நபர்களின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தி பார்த்ததில் அவர்களுக்கு கொரோனா இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வருகிறது. கிட்டத்தட்ட 94 சதவீதம், நாய்கள் மோப்ப சக்தி மூலம் கண்டுபிடிப்பது உறுதியாகியுள்ளது. உலகிலேயே டுபாய் விமான நிலையத்தில் முதல் முதலாக நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அதே போல, நாய்களின் மோப்ப சக்திகள் மூலம் கொரோனா தொற்றை கண்டறிய முடியும் என்பதால் அடுத்ததாக சிலி நாட்டில் அமைந்துள்ள விமான நிலையங்களிலும் கொரோனா தொற்றை கண்டுபிடிக்க நாய்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்