'ஃபேக்டரி கார் பார்க்கிங்கில்... இளைஞர்கள் செய்த வேலை!'.. 'அதிர்ச்சி' அடைந்து அறிவுரை சொன்ன ஊழியருக்கு நேர்ந்த சோகம்!.. பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் தொழிற்சாலை ஊழியர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரது தலையை துண்டிக்க முயன்ற இரண்டு இளைஞர்களான  Kiyran Earnshaw, 18 மற்றும் Luke Gaukroger, 16 ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

'ஃபேக்டரி கார் பார்க்கிங்கில்... இளைஞர்கள் செய்த வேலை!'.. 'அதிர்ச்சி' அடைந்து அறிவுரை சொன்ன ஊழியருக்கு நேர்ந்த சோகம்!.. பரபரப்பு தீர்ப்பு!

பிரிட்டனில் கடந்த ஜனவரி மாதம் Huddersfieldல் உள்ள தொழிற்சாலை அருகே உள்ள கார் பார்க்கிங்கில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று 53 வயதான கொலை செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர் Robert Wilson தனது சக ஊழியர்கள் இருவருடன் கார் நிறுத்தும் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே மது அருந்தியபடி மேற்கண்ட இரு இளைஞர்களும் இருந்துள்ளனர். அவர்களைப் பார்த்த  Robert Wilson அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தவே அதற்கு அந்த இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்களில் ஒருவரான Kiyran Earnshaw என்கிற இளைஞன், தான் மறைத்து வைத்திருந்த வாளை உருவி  Robert Wilson மீது கண்மூடித்தனமாக தாக்க, இன்னொரு இளைஞன் அவனை  ஊக்குவிக்கும் படி கத்திக்கொண்டிருந்துள்ளான். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதனிடையேன் உடல் முழுவதும் 100க்கும் அதிகமான வாள் வெட்டு காயங்களை வாங்கிய  Robert Wilson சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானதை அடுத்து சிக்கிய இரண்டு இளைஞர்களும் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற செய்திகள்