200 நாடுகளால் தேடப்படும் டான்.. கடைசில மாடல் பேச்சை கேட்டு போலீஸ்ல மாட்டிக்கொண்ட சம்பவம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஃபோட்டோ தானாம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

200 நாடுகளால் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் கொலம்பியா நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு காரணம் ஒரு புகைப்படம் தான் என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். 

200 நாடுகளால் தேடப்படும் டான்.. கடைசில மாடல் பேச்சை கேட்டு போலீஸ்ல மாட்டிக்கொண்ட சம்பவம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஃபோட்டோ தானாம்..!

Also Read |  அடடே! குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் Last Seen-அ மறைக்கலாமா?. செம வாட்சாப்பில் வரும் புதிய வசதி.. உற்சாகத்தில் மக்கள்..!

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் பிரையன் டொன்கியானோ. 40 வயதான பிரையன் மெக்சிகோவை மையமாகக்கொண்டு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய போதைப்பொருள் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். தன்னுடைய இருபது வயதில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த பிரையன், ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார்.

Drug lord on run from 200 countries caught after stay with model

200 நாடுகள்

இதன் காரணமாக மெக்சிகோவிற்கு வெளியே போதைப்பொருள் விற்பனையை பிரையன் தொடங்கியிருக்கிறார். பல்வேறு நாடுகளில் இந்த தொழிலை செய்து வரும் பிரையனுக்கு கீழே 5000 பேர் பணிபுரிகிறார்கள். இதனால் பிரையனை 200 நாடுகள் தேடி வருகின்றன. அமெரிக்கா இதுவரை 30-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து பிரையனை பிடிக்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்து வந்தது. சாதாரணமாக வெளியே செல்லும் போது கூட 100 பாதுகாப்பு பணியாளர்களுடன் செல்லும் பிரையன் சமீபத்தில் தன்னந்தனியாக தனது காதலியை பார்க்க சென்று காவல்துறையிடம் சிக்கி இருக்கிறார்.

காதல்

சமீபத்தில் பேஸ்புக் மூலமாக ஒரு மாடலிங் பெண்ணுடன் பிரையனுக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து ஒருகட்டத்தில் சந்தித்து பேச முடிவு எடுத்த பிரையன் அந்தப் பெண்ணை தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை ஏற்று அந்த மாடலிங் பெண் கொலம்பியாவிற்கு வந்திருக்கிறார்.

இருவரும் அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டுகழித்து மகிழ்ச்சியாக இருந்திருக்கின்றனர். அப்போது உற்சாக மிகுதியால் பிரையன் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அந்த பெண். இதனை கண்ட கொலம்பியா போலீஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, பிரையன் தங்கியிருந்த விடுதியை சுற்றி 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருக்கிறார் பிரையன்.

Drug lord on run from 200 countries caught after stay with model

அவர் மீது போதைப்பொருள் வழக்குகள் இருப்பது தனக்குத் தெரியாது என தெரிவித்திருக்கிறார் அந்த பெண். அமெரிக்க போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்த பிரையன், காதலியை பார்க்க சென்ற போது கைதான சம்பவம் உலக நாடுகளை திகைக்க வைத்திருக்கிறது.

Also Read | "World-Class பஸ் ஸ்டாப் இது".. ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச வீடியோ.. பேருந்து நிறுத்தத்தில் இவ்வளவு வசதிகளா? வாயை பிளந்த நெட்டிசன்கள்..!

DRUG LORD, RUN, COUNTRY, MODEL, COLOMBIA

மற்ற செய்திகள்