டாட்டூவுக்கு மட்டும் ₹1.9 கோடி செலவு.. "ஆனா அதுக்கு அப்றம்" .. மாடல் அழகியின் பரிதாப நிலை.!
முகப்பு > செய்திகள் > உலகம்தற்போதெல்லாம் டாட்டூ போட்டுக் கொள்ளும் பழக்கம் மிகவும் சாதாரணமான ஒரு கலாச்சாரமாகிவிட்டது.
பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் சில காலமாக இருந்து வரும் நிலையில், இடைப்பட்ட காலத்தில், டிஜிட்டல் உலகத்துக்கு தகுந்தாற்போல் பலரும் டிசைன் டிசைனாக டாட்டூ போட்டுக் கொள்வதை விரும்ப தொடங்கினர். எனினும் இவ்வாறு டாட்டூ போட்டு கொள்பவர்களுக்கு விமான நிலையம், கல்வி நிலையங்கள், அரசு பணிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமங்கள் இருந்து வந்தன.
ஒரு சில இடங்களில் அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொண்டாலும் உடலின் அனைத்து பாகங்களும் டாட்டூ போட்டுக் கொள்பவர்களை ப்ரொபஷனலாக கருதாத பல நிறுவனங்கள் இவர்களை வேலைக்கு எடுப்பதில் தயக்கம் காட்டி வந்தன.
இப்போது இப்படித்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல் வழங்கி ஒருவர், தமது உடல் முழுக்க டாட்டு போட்டுக் கொண்டதால், பின்னால் ஏற்பட்ட சிக்கலை தற்போது சந்தித்து வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த 27 வயதான ஆம்பர் லூக் என்கிற இந்த பெண்மணி தன்னுடைய காது உட்பட உடலில் 98 சதவீதம் பாகங்களை டாட்டூவால் நிரப்பி இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் டிராகன் கேர்ள் என்று இவரை பலரும் அழைக்கின்றனர். இதுவரை சுமார் 2 லட்சம் பவுன்ட்ஸ் இப்படி டாட்டூ போடுவதற்காக செலவிட்டு இருக்கிறார். இந்திய மதிப்பில் சொல்ல வேண்டும் என்றால் ரூபாய் 1.9 கோடி. ஆனால் தனக்கு பிடித்தது போல் தனித்துவமான முறையில் டாட்டூக்களை போட்டுக் கொள்வதால் பலரும் தன்னை புறக்கணிப்பதாகவும், பல இடங்களில் தான் பாகுபாடுடன் நடத்தப்படுவதாகவும் தம்முடைய உள்ள குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆம்பர் லூக்.
அதன்படி, “நான் மிகவும் அதிகமாக டாட்டூ குத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் யாருக்கும் நான் எந்த தீங்கும் செய்யவில்லை. கருத்துக்களை கூறுவதற்கு ஒருவருக்கும் ஒரு உரிமை உண்டு .. ஆனால், மக்கள் என்னுடைய டாட்டூ குறித்து மோசமான கருத்துக்களை வெளியிடும் போது சற்று வேதனையாகவே இருக்கிறது.
குறிப்பாக டாட்டூ போட்டு கொண்டு என்னுடைய தோற்றத்தையே நான் அழித்து விட்டதாக அவர்கள் கூறும் பொழுது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பேசியவர், “இந்த தோற்றத்தால் எனக்கு வேலை கிடைப்பதில் சிரமங்கள் எடுக்க செய்கின்றன. இதேபோல் இப்படி வேலை வாய்ப்பு உள்ளிட்ட எதுவும் என்னுடைய விருப்பங்களை மட்டுப்படுத்துமாயின், இப்படி எத்தனை தடைகள் வந்தாலும் அதைப்பற்றி பரவாயில்லை , எனக்கு கவலை இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்