RRR Others USA

ஒமைக்ரான் டெல்டாவ ஓவர்டேக் பண்ணிடுச்சு, இனி பாதிப்பு கடுமையா இருக்க போகுது, எச்சரித்த தொற்றுநோய் நிபுணர்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தீவிரமாக பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வகை கொரோனா வைரசை மிஞ்சிவிட்டது, ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணரும் வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் ஃபாசி கூறியுள்ளார்.

ஒமைக்ரான் டெல்டாவ ஓவர்டேக் பண்ணிடுச்சு, இனி பாதிப்பு கடுமையா இருக்க போகுது, எச்சரித்த தொற்றுநோய் நிபுணர்

அதி வேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வகை கொரோனா வைரசை மிஞ்சிவிட்டது, ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணரும் வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் ஃபாசி தெரிவித்துள்ளார்.

Dr. Fauci says omicron exposure is higher than delta

அமெரிக்காவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி கொரோனா பாதிப்புகள் ஒமைக்ரானால் ஏற்படுகிறது.தினம் தினம் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே போகும் என்று எச்சரிக்கிறார் டாக்டர் ஃபாசி.

வேகமாக பரவும் ஒமைக்ரான்:

அதி வேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வகை கொரோனா வைரசை மிஞ்சி விட்டது, ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி கொரோனா பாதிப்புகள் ஒமைக்ரானால் ஏற்படுகிறது. அமெரிக்காவில் கடந்த வாரத்தில் சராசரியாக ஒன்றரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தினம் தினம் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே போகும்.

Dr. Fauci says omicron exposure is higher than delta

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை:

ஒமைக்ரான் தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலைமை குறைவாகவே ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தாலும், பொதுமக்கள் அதனை எளிதாக எண்ணி நடந்து கொள்ளக்கூடாது. மிக அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் அதிகரிக்கும் போது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை அதிகரிக்கக்கூடும்.

விடுமுறைக் காலம்:

அமெரிக்க மக்கள், இப்போது விடுமுறை காலம் என்பதால் ஒமைக்ரான் மற்றும் கொரோனாவுக்கு எதிராக தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகின்றனர். இப்போதைய சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாது. அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்வதில் சில சிரமங்கள் உள்ளன. அந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும், என்றார் டாக்டர் ஃபாசி.

Dr. Fauci says omicron exposure is higher than delta

அமெரிக்காவில் நியூயார்க்கில் ஓமைக்ரான் கேஸ்களினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் பாதிப்பேர் 5 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கான வாக்சின் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

DR. FAUCI, OMICRON, DELTA, ஒமைக்ரான்

மற்ற செய்திகள்