உலகின் அழிவை கணிக்கும் Doomsday clock.. இன்னும் 90 செகண்டுகள் தான்.. பகீர் கிளப்பிய ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் அழிவை கணிக்க ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட Doomsday clock-ல் இன்னும் 90 வினாடிகளே மீதம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கான காரணத்தையும் ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

உலகின் அழிவை கணிக்கும் Doomsday clock.. இன்னும் 90 செகண்டுகள் தான்.. பகீர் கிளப்பிய ஆராய்ச்சியாளர்கள்..!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

"டூம்ஸ்டே கடிகாரம்" என்பது நோபல் பரிசுபெற்ற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களால் வடிவமைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்டோர் கொண்ட குழு இந்த கடிகாரத்தை உருவாக்கியது. உலகின் அழிவை கணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அணு கடிகாரம் நள்ளிரவு 12 மணியை தொட்டுவிட்டால் உலகம் அழியும் என சொல்லப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த டூம்ஸ்டே கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணி ஆவதற்கு 3 நிமிடங்கள் மீதம் இருந்தன. தற்போது இந்த நேரம் இன்னும் குறைந்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

அதாவது, தற்போதைய நிலையில் டூம்ஸ்டே கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணியை அடைய இன்னும் 90 வினாடிகளே இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அணு விஞ்ஞானிகள் இந்த மாற்றத்திற்கு அணுசக்தி யுத்தம், பெருநோய் மற்றும் காலநிலை ஏற்ற இறக்கம் போன்ற அச்சுறுத்தல்களே காரணம் என்று கூறியுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் வளர்ந்து வரும் அணுசக்தி பயன்பாடு ஆகியவற்றால் இந்த அச்சுறுத்தல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

டூம்ஸ்டே கடிகாரத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரமானது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, அணு ஆயுதப் போர் பற்றிய அச்சத்தை பிரதிபலிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய புல்லட்டின் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ரேச்சல் ப்ரோன்சன்,"நிலைமை கைமீறி செல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த டூம்ஸ்டே கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணியை அடைய 100 வினாடிகள் மீதி இருக்கும்படி ஆராய்ச்சியாளர்கள் மாற்றி அமைந்திருந்தனர். இதுவே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் நீடித்தது. எச்சரிக்கை அளிக்கும் விதத்தில் மிக குறைவான நேரத்தை கொண்டதாக இது கருதப்பட்ட நிலையில் தற்போது இது 90 வினாடிகளாக குறைந்துள்ளது.

அதேபோல, 1991 ஆம் ஆண்டு அமெரிக்கா - ரஷ்யா இடையே பனிப்போர் முடிவடைந்த சமயத்தில் டூம்ஸ்டே கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணியை அடைய 17 நிமிடங்கள் மீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளும் அணுஆயுதம் குறித்து பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்ட நிலையில் சுமூகமான சூழ்நிலை உருவானது. இதனால் டூம்ஸ்டே கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணியை அடைய 17 நிமிடங்கள் இருக்கும்படி ஆராய்ச்சியாளர்கள் மாற்றி அமைந்திருந்தனர்.

Also Read | Budget 2023: அல்வா கிளறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.. பட்ஜெட்டுக்கும் அல்வாவுக்கும் இப்படி ஒரு சம்பந்தம் இருக்கா..?!

DOOMSDAY CLOCK

மற்ற செய்திகள்