ஹெச்-1 பி விசா: டிரம்பின் முடிவால் 'ஆடிப்போன' ஐடி துறை... கலங்கும் இந்தியர்கள்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஹெச்-1 பி விசா தடையால் ஐடி துறை மிகப்பெரிய அளவில் ஆடிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹெச்-1 பி விசா: டிரம்பின் முடிவால் 'ஆடிப்போன' ஐடி துறை... கலங்கும் இந்தியர்கள்?

வல்லரசு நாடான அமெரிக்காவில் வேலை செய்திட வேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்க்கை கனவாகவே உள்ளது. இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ஹெச்-1 பி உள்ளிட்ட பல விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் மிகப்பெரிய அளவில் உலக நாடுகள் இழப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. குறிப்பாக வேலையின்மை உலக மக்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து இருக்கிறது. இதற்கு அமெரிக்காவும் தப்பவில்லை. எனவே அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியர்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஹெச்-1 பி விசா திறமை மற்றும் ஊதிய நிலை இரண்டையும் கவனத்தில் கொள்ளும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 85 ஆயிரம் ஹெச்-1 பி விசாக்கள் வழங்கப்பட்டு வந்ததாகவும், இதில் 70% பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்காவில் 5 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் வெளியில் இருந்து சேவைகளைப் பெறுவதற்கான அவுட்சோர்சிங் பணிகள் முழுவதும் நிறுத்தப்படுவதற்கும் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதேபோல மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஜே 1 விசாக்களும் இனி கொரோனாவை குணப்படுத்த முன்வரும் மருத்துவர்களுக்கு தான் வழங்கப்படும் என்றும் அமெரிக்கா புதிய கெடுபிடிகளை அறிவித்துள்ளது.

தற்போது டிரம்ப் விதித்துள்ள தற்காலிக தடையால் லட்சக்கணக்கான பேர் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மறுபுறம் டிரம்ப் தேர்தலை மனதில் வைத்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மற்ற செய்திகள்