'என்ன ஒரு பொய்'... ‘ட்விட்டரில் சுந்தர் பிச்சையை சாடிய’... ‘அதிபர் டொனால்ட் ட்ரம்ப்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை ட்விட்டர் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.

'என்ன ஒரு பொய்'... ‘ட்விட்டரில் சுந்தர் பிச்சையை சாடிய’... ‘அதிபர் டொனால்ட் ட்ரம்ப்’!

வரும் 2020 ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிழமையன்று காலையிலேயே ட்விட்டர் மூலம் கூகுள் நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார். கடந்த மார்ச் மாதம் வெள்ளை மாளிகைக்கு வந்த சுந்தர் பிச்சை, ‘தன்னைப் பிடிக்கும் என்றும், தன் நிர்வாகத்தைப் புகழ்ந்து பேசியதோடு, அமெரிக்க ராணுவத்துக்கே கடமைப் பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்துக்கு உதவுவதாகக் கூறுவது முற்றிலும் பொய் என்றும் விளக்கமளித்தார்’.

ஆனால், இதனை கூகுளில் பணியாற்றிய முன்னாள் பொறியாளர் கெவின் கெர்னெகீயை சந்திக்கும் வரையில், தான் உண்மை என நம்பிக்கொண்டிருந்ததாக  அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்துளளார். கெவின் கூறித்தான் கடந்த 2016-ம் ஆண்டு, அதிபர் தேர்தலின் போது ஹிலாரி குறித்த எதிர்மறையான தகவல்களை பின் தள்ளிவிட்டு, தன்னை பற்றிய எதிர்மறையான தகவல்களை கூகுள் முன்னிலைப்படுத்தியது தெரியவந்ததாகவும் டிரம்ப் கூறியுள்ளார். இதேபோல் 2020 தேர்தலிலும் தமது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்துள்ள ட்ரம்ப், சுந்தர் பிச்சை தன்னிடம் பொய் சொல்லிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள கூகுள் நிறுவனம், ஒற்றைச் சார்புடனோ, அரசியல் சார்புடனோ தங்கள் நிறுவனம் செயல்படவில்லை என கூறியுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் தங்கள் தொழிலை பாதிக்கும் என்றும், கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கெவின் என்ற அந்த ஊழியர், அதிருப்தி காரணமாக சொல்வது முற்றிலும் பொய் என்று குறிப்பிட்டுள்ளது.

GOOGLE, DONALDTRUMP