கிம்-ஐ 'ஒத்த வார்த்தையால' கேவலமாக திட்டிய 'முன்னாள்' அதிபர்...! 'நேர்ல பாக்குறப்போ நல்ல சிரிச்சு பேசிட்டு...' - அங்க போய் 'என்ன' பண்ணியிருக்கார் பாருங்க...!
முகப்பு > செய்திகள் > உலகம்முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (donald Trump) வடகொரிய அதிபரை சர்ச்சைக்குரிய வகையில் திட்டியுள்ள சம்பவம் உலகளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அமெரிக்கா மற்றும் வடக்கொரியாவின் உறவை பாதுகாக்க, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) உடன் பொது இடங்களில் நட்பு பாராட்டி வந்தார்.
மேலும், உலக நாடுகளை எதிர்த்து வட கொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு ஆயுத சோதனைகளையும் நிறுத்துவதற்கு அமெரிக்கா பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
ஒரு சில முறை டிரம்ப், கிம்மை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதும் உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
உலகநாடுக்கள் அனைத்தும் வடகொரியாவும், அமெரிக்காவும் சுமுக உறவில் இருந்தது என எண்ணியது. ஆனால், காலம் கடக்க இந்த உறவு ஒரு மேகம் போன்று மறைய ஆரம்பித்தது. வடக்கொரியாவும் மீண்டும் தன் அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்ய ஆரம்பித்தது.
தற்போது டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இல்லாத நிலையில் வடகொரிய அதிபர் கிம்மை சர்ச்சைக்குரிய வகையில் திட்டி தீர்த்துள்ளார்.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் பாப் உட்வார்டு மற்றும் ராபர்ட் கோஸ்டா, 'டிரம்ப் - கிம்' சம்பந்தமான ஒரு புத்தகத்தை வெளியிட உள்ளனர். அந்தப் புத்தகத்தில்தான், கிம் குறித்து டிரம்ப் தன் உயர் அதிகாரிகளோடு உரையாடுகையில், 'அவர் ஒரு பைத்தியக்காரன்' என்று சொல்லியிருக்கிறார்' எனக் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்