'வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறினால்...' போராட்டக்காரர்கள் 'வரவேற்கப்பட்டிருக்கும்' விதமே 'வேறு'... 'ட்ரம்பின்' பேச்சால் 'வெடிக்கும் போராட்டம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வெள்ளை மாளிகையை சுற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போராட்டக்காரர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றால் கொடூரமான நாய்களாலும், ஆயுதங்களாலும் வரவேற்கப்பட்டிருப்பார்கள் என அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறினால்...' போராட்டக்காரர்கள் 'வரவேற்கப்பட்டிருக்கும்' விதமே 'வேறு'... 'ட்ரம்பின்' பேச்சால் 'வெடிக்கும் போராட்டம்...'

அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை மோசடி வழக்கில் சந்தேகித்து போலீசார் கைது செய்தனர். அப்போது காவலர் ஒருவர் அவரது கழுத்தில் மிதித்து துன்புறுத்தியதால், அவர் மரணமடைந்தார்.

இதையடுத்து ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மினியாபோலிஸ் நகரில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டத்தின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது.

வெள்ளை மாளிகையை சுற்றி ஏராளமான போராட்டக்காரர்கள் கைகளில் பதாகைகளுடன் நீதிகேட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்கார்கள், பாதுகாப்பு வளையத்தை தகர்த்திருந்தால், கொடூரமான நாய்களைக் கொண்டும், பயங்கர ஆயுதங்களைக் கொண்டும் வரவேற்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அதுபோல் எதுவும் நிகழ்ந்ததாக தாம் பார்க்கவில்லை என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிபரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்