'நிச்சயம் ஒருநாள் திரும்பி வருவார் என...' '3 மாசமா ஹாஸ்பிட்டலே கதின்னு...' 'எஜமானருக்காக காத்திருக்கும் நாய்...' சில நாள்கள் சாப்பிட கூட இல்ல...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தான் வளர்ந்து வந்த வீட்டின் எஜமானர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு நாள் நிச்சயம் திரும்பி வருவார் என மூன்று மாதங்களாக மருத்துவமனையின் லோப்பியில் நாய் ஒன்று காத்திருக்கிறது.

'நிச்சயம் ஒருநாள் திரும்பி வருவார் என...' '3 மாசமா ஹாஸ்பிட்டலே கதின்னு...' 'எஜமானருக்காக காத்திருக்கும் நாய்...' சில நாள்கள் சாப்பிட கூட இல்ல...!

கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் உடல்நலக்கோளாறால் மங்கோல் என்ற வகையை சேர்ந்த சியாவோ பாவோ என்று அழைக்கப்படும் 7 வயது நாய் குட்டி சிகிச்சைக்காக சீனாவின் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சியாவோ பாவோ நாயின் உரிமையாளர் கொரோனா வைரசால் பாதிப்படைந்து சீனாவின் ஹூபே மாகாணத்தில் வுஹான் தைகாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவருக்காக, கடந்த மூன்று மாதங்களாக தன் எஜமானர் திரும்பி வருவார் என மருத்துவமனையிலேயே தன் நாட்களை கழித்து வருகிறது சியாவோ பாவோ.

சியாவோ பாவோ நாய் குறித்து மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் கூறும் போது, நாங்கள் சிகிச்சை முடிந்த பின் நாயை இடமாற்றம் செய்ய முயன்றோம்.  ஆனால் அது தனது மோப்ப சக்தி கொண்டு வழி கண்டு பிடித்து தன் எஜமானர் எங்கு அதை முதலில் விட்டாரோ அங்கே வந்து அமர்ந்து கொண்டது.

மேலும் ஒரு சில நாட்கள் உணவு கூட உண்ணாமல் தன் எஜமானருக்காக காத்திருந்துள்ளது. தற்போது எங்கள் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் நாங்கள் சியாவோ பாவோக்கு தேவையானவற்றை அளித்து கவனித்து வருகிறோம். ஆனால் அது தற்போதும் தன் எஜமானர் வந்து தன்னை கொண்டு செல்வதற்காகவே காத்துக்கொண்டிருக்கிறது. மூன்று மாதத்தில் ஒரு முறை கூட மருத்துவமனையை விட்டு வெளியே செல்லவில்லை' என்று கூறினர்.

கடந்த வாரம் தான், சியாவ் பாவோ வுஹான் சிறு விலங்கு பாதுகாப்பு சங்கத்தால் வேறொரு தங்குமிடதிற்கு மாற்றப்பட்டுள்ளது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்