அதிகரிக்கும் சர்ச்சை.. டிரம்பின் ட்விட்டர் கணக்கு நீக்கம் தொடர்பாக மௌனம் கலைத்த ‘ட்விட்டர் சிஇஓ’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகை மற்றும் சர்ச்சை கருத்து வெளியிட்டது தொடர்பான அடுக்கடுக்கான காரணங்கள் டிரம்ப் மீது வைக்கப்பட்டன.

அதிகரிக்கும் சர்ச்சை.. டிரம்பின் ட்விட்டர் கணக்கு நீக்கம் தொடர்பாக மௌனம் கலைத்த ‘ட்விட்டர் சிஇஓ’!

இதனை அடுத்து ட்விட்டர் கணக்கு முழுமையாக முடக்கப்பட்டது. இதில் முக்கிய பங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜயா கடே என்பவருக்கு இருந்ததாக செய்திகள் வெளியாகின.  ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வரும் விஜயா கடே என்பவர் தான், டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில், “இனிமேலும் வன்முறை ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக டிரம்பின் கணக்கு ட்விட்டரிலிருந்து நிரந்தரமாக செயல்நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எங்கள் கொள்கை அமலாக்க பகுப்பாய்வையும் வெளியிட்டுள்ளோம்” என்று சில ட்விட்டர் விதிகளையும் பற்றி கூறியிருந்தார்.

இதனிடையே டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது பேச்சுரிமையை பாதிக்கக் கூடிய செயல் என்று பலரும் கூறி வந்தனர். ட்விட்டரின் இந்த செயல் தனிமனிதரின் பேச்சு சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடாக இருப்பதாக தெரிவித்தனர்.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இதுகுறித்து பேசும்போது, இப்படி தனி மனிதரின் பேச்சு சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடு குறித்து  மக்கள் பிரதிநிதிகள் தான் முடிவு செய்ய வேண்டும் தவிர தனியார் நிறுவனங்கள் முடிவு செய்யக்கூடாது என்று தம் தரப்பிலிருந்து தெரிவித்திருந்தார்.

Doesn't feel proud Twitter CEO over ban on Trumps Twitter issue

இந்த நிலையில்தான் டிரம்பின் டிவிட்டர் கணக்குக்கு தடை விதித்தது சரியான முடிவுதான். ஆனால் இது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சி தெரிவித்திருக்கிறார். தன்னுடைய குறிப்பில் இது தொடர்பாக பேசிய ட்விட்டர் CEO, Jack Dorsey, “டிவிட்டர் கணக்குக்கு தடை விதித்ததை நாங்கள் பெருமையாகவோ, கொண்டாட்டமாகவோ கருதவில்லை.

தெளிவான எச்சரிக்கைக்குப் பிறகு, நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்தோம். ட்விட்டருக்கு உள்ளேயும் வெளியேயும் வந்த பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களின் அடிப்படையில் எங்களுக்கு கிடைத்த சரியான தகவல்களைக் கொண்டு இப்படி ஒரு முடிவை எடுத்தோம். இது சரியானதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

மற்ற செய்திகள்