ஆப்பிரிக்காவின் 'ஆர்கானிக்' மூலிகைப் பானம்... 'கொரோனாவை குணப்படுத்துகிறதா?...' 'வரலாற்றை மாற்றி எழுதுமா என ஆய்வு?...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவுக்கு எதிராக artemisia என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் "கொரோனா ஆர்கானிக்" என்ற பானத்தை ஆப்பிரிக்க நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. இது உண்மையில் கொரோனாவை குணப்படுத்துகிறதா? என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர், "கோவிட் ஆர்கானிக்" என்ற மூலிகை பானம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி கொரோனாவை குணப்படுத்தும் என மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரி ரஜோலினா தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதியில் கோவிட் ஆர்கானிக் பானத்தை அறிமுகம் செய்த அவர், அதை அருந்தி நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை விதைத்தார். இது artemisia மலேரியாவுக்கான மருந்து தயாரிக்கும் ஒருவகை தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை பானம். கோவிட் ஆர்கானிக் பானம் அருந்துவதால் கொரோனா குணமாகும் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என கூறிவிட்டது உலக சுகாதார நிறுவனம்.
ஆனால், மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரி ரஜோலினா, இந்த பானத்தை வைத்து ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அதில் இருவர் குணமடைந்ததாகவும் கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து மடகாஸ்கரில் அரசே இலவசமாக மக்களுக்கு கோவிட் ஆர்கானிக் பானத்தை வழங்கி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற ஆப்ரிக்க நாடுகளும் மடகாஸ்கரிடம் கோவிட் ஆர்கானிக் பானத்தை இறக்குமதி செய்து வருகின்றன. தான்சானியா, காங்கோ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பானத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இநத் மூலிகை பானம் இந்திய மதிப்பில் வெறும் 28 ரூபாய்தான். ஆனாலும் சக ஆப்ரிக்க நாடுகளுக்கு இலவசமாகவே மடகாஸ்கர் அனுப்பி வைத்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த Max Planck ஆய்வு மையம் artemisia தாவரம் கொரோனாவை குணப்படுத்துமா என்று ஆய்வு செய்து வருகிறது. அவற்றின் முடிவுகள் வந்தபின்புதான், மடகாஸ்கர் அதிபர் சொன்னதுபோல இது கொரோனா வரலாற்றை மாற்றி எழுதுமா? என்பது தெரியவரும்.