'அந்த மாதிரி' படம் பாக்குறவங்களுக்கு செக்.. அவ்ளோ ஈசியா உள்ள போக முடியாது.. புதிய ரூல்ஸ் போட்ட நாடு
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து: இங்கிலாந்து நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே போர்ன் தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு புதிய செயல்முறையை அந்நாட்டு அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் அவசியம்:
இன்றைய இணைய யுகத்தில் கையளவு செல்போன் மூலம் யார் என்ன செய்கிறார்கள் என்கிற நிலை தான் உலகம் முழுக்க நிலவி வருகிறது. அதுவும் கொரோனா ஊரடங்கு, வீட்டில் இருந்து பணிபுரியும் முறை வந்த பிறகு பார்ன் படங்கள் பார்ப்பது அதிகரித்துள்ளது என புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. அதோடு குழந்தைகளும் அதிகளவில் இணையத்தை பயன்படுத்தி வரும் நிலையில் சில கட்டுப்பாடுக்களும் பின்பற்ற வேண்டியது முக்கியமாகிறது.
2021ல் இளைஞர்கள் அதிகம் தேடியது எவ்வகை ஆபாச வீடியோக்கள் என்ற பட்டியலை பிரபல ஆபாச இணையதளமான பார்ன் ஹப் வெளியிட்டுள்ளது. 18வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இம்மதிரியான தளங்களை பார்க்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் இதனை யாரும் பின்பற்றுவது இல்லை.
கொடுக்க வேண்டிய ஆவணங்கள்:
இந்நிலையில் பிரிட்டிஷ் அரசு தங்கள் நாட்டில் போர்ன் தளங்களைப் பயன்படுத்துபவர்கள் 18 வயதைக் கடந்தவர்களா என்பதை அறிய க்ரெடிட் கார்ட், பாஸ்போர்ட் முதலான தகவல்கள் கொடுத்தாக வேண்டிய சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
பயனாளர்களால் உருவாக்கப்படும் போர்ன் தளங்களுக்கும் இந்தச் சட்ட மசோதா பொருந்தும்:
ஆன்லைன் பாதுகாப்பு மசோதா என்றழைக்கப்படும் இந்தச் சட்ட மசோதாவில் முதலில் கமர்சியல் போர்ன் தளங்கள் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒன்லீஃபேன்ஸ் முதலான பயனாளர்களால் உருவாக்கப்படும் போர்ன் தளங்களுக்கும் இந்தச் சட்ட மசோதா பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக இணையம்:
இதுக்குறித்து இணையத்துறை அமைச்சர் க்றிஸ் ஃபிலிப் கூறும் போது, 'ஒரு குழந்தை பார்க்க கூடாதவற்றைப் பார்க்காமல் இருப்பதில் தான் அந்த குழந்தையில் பாதுகாப்பு அடங்கியுள்ளது. அதன் மூலம் குழந்தைகளின் மன அமைதி சீர்குலைய வாய்ப்பு அதிகம். எனவே இதற்கு பெற்றோர்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமாக இணையத்தை மாற்றுவதற்கான பணிகளை இதன்மூலம் பலப்படுத்தி வருகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்