'பின்னாடி' வழியா 'மீன்' உள்ள போயிடுச்சு... 'x ray' பார்த்து 'அரண்டு' போன 'மருத்துவர்கள்'... உக்காரும் போது 'பாத்து' உக்காரணும்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் வயற்றில் இருந்து திலபியா எனப்படும் மீனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.
தெற்கு சீனாவின் குவாங்டங் மாகாணத்தின் சாயோகிங் என்னும் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் 30 வயது நபர் ஒருவர் கடுமையான வயற்று வலி காரணமாக சென்றுள்ளார். அப்போது அவருக்கு எக்ஸ் ரே எடுத்து பார்த்ததில் வயிற்றுக்குள் மீன் ஒன்று இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
முன்னதாக, அந்த நபர் தவறுதலாக திலபியா என்னும் மீன் ஒன்றின் மீது அமர்ந்துள்ள நிலையில், அது பின்னாடி வழியாக மலக்குடல் சென்றுள்ளது. அவரால் மீனை எடுக்க முடியாத நிலையில், கடும் வேதனையுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு வேதனை சற்றும் குறையவில்லை என தெரிகிறது. அது மட்டுமில்லாது, இறந்த மீனும் சற்று பெரிய அளவில் இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அங்குள்ள ஊடகங்கள் அந்த மீனின் நீளம் குறித்து தகவல் எதுவும் வெளியிடாத நிலையில், சுமார் 30 - 40 சென்டிமீட்டர் (12 - 16 இன்ச்) இருக்கலாம் என கருதப்படுகிறது. அதே போல, பாதிக்கப்பட்ட அந்த நபரின் நிலைமையும் குறித்தும் உரிய தகவல் வெளியிடப்படவில்லை. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்