RRR Others USA

அப்ப ‘கொரோனா’.. இப்ப ‘ஒமைக்ரான் அடுத்து ‘ஃப்ளோரோனா’வா? புதுசு புதுசா கிளம்புதே!! அதிர்ச்சியில் உலக மக்கள்! முழு விபரம்.

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இஸ்ரேல்: உலகளவில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் குறித்தே இன்னும் ஆய்வுகள் நடத்தவேண்டிய நிலையில் தற்போது இஸ்ரேலில் அடுத்த வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்ப ‘கொரோனா’.. இப்ப ‘ஒமைக்ரான் அடுத்து ‘ஃப்ளோரோனா’வா? புதுசு புதுசா கிளம்புதே!! அதிர்ச்சியில் உலக மக்கள்! முழு விபரம்.

கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உருமாறி ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான், டெல்மைக்ரான் என பரவி வருகிறது. இந்நிலையில் இன்று புத்தாண்டு பிறந்துள்ளது நிலையில் கொரோனா வைரசும் ஒரு புதிய வைரசாக உருமாற்றம் அடைந்துள்ளது.

ஃப்ளோரினா எனும் இரட்டை உருமாற்ற வைரஸ்:

இஸ்ரேலில் ஃப்ளோரினா எனும் இரட்டை உருமாற்ற வைரஸை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரசில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கரோனா வைரஸும் சேர்ந்து ஒருங்கிணைந்து இருகிறதாம். அதனால் இதற்கு ஃப்ளோரோனா வைரஸ் எனும் பெயர் வைத்துள்ளனர் என அராப் நியூஸ் தெரிவித்துள்ளது.

Doctors discovered a double mutant virus Florina in Israel.

இந்த வைரஸ் முதன் முதலில் டெல் அவைவ் நகரில் உள்ள ராபின் மருத்துவ மையத்துக்கு பிரசவத்து சென்ற பெண்ணின் உடலில் கண்டறியப்பட்டுள்ளது. பிரச்சவத்திற்கு முன் அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ், இன்ஃப்ளூயன்ஸா இரண்டும் இணைந்த ஃப்ளோரோனோ வைரஸ் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

Doctors discovered a double mutant virus Florina in Israel.

கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை:

அதோடு அந்த பெண் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று இஸ்ரேல் நாளேடான யேதியோத் அஹ்ரோநோத் தெரிவி்த்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வரும் நிலையில் இஸ்ரேலில் ஃப்ளோரோனோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மேலும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Doctors discovered a double mutant virus Florina in Israel.

மாதிரிகள் பரிசோதனை:

தற்போது கண்டறியப்பட்டுள்ள  இந்த ஃப்ளோரோனா என்பது ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கொரோனா வைரஸும் தாக்கினால் வரக்கூடியது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அதோடு கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுப் பரிசோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பியுள்ளனர்.

பெரிய பாதிப்பு:

இந்த சம்பவம் குறித்து கெய்ரோ பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் நாலா அப்தெல் வஹாப் கூறும் போது, 'ஃப்ளோரோனா வைரஸ் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால் இரு வைரஸ்கள் மனிதர்களை ஒரே நேரத்தில் தாக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி திறன் கடுமையாக பாதிக்கும்' என அதிர்ச்சியளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

CORONAVIRUS, OMICRON, DOUBLE MUTANT VIRUS, ISRAEL, OMICRON, ஃப்ளோரோனா, ஒமைக்ரான், இஸ்ரேல், FLORONA

மற்ற செய்திகள்