"கான்டாக்ட் லென்ஸை எடுக்க மறந்துட்டேன்".. வலியோட வந்த பாட்டி.. கண்ல இருந்ததை பாத்துட்டு மிரண்ட டாக்டர்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண்மணி ஒருவரது கண்ணில் இருந்து காண்டாக்ட் லென்ஸ்களை மருத்துவர் வெளியே எடுக்கும் திக் திக் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Also Read | வேலையில சின்னது பெருசுன்னு எதுவும் இல்ல.. இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பி.டெக் மாணவியின் டீ கடை ..
மருத்துவ துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக புழக்கத்திற்கு வந்தவை காண்டாக்ட் லென்ஸ்கள். கண்ணாடி அணிய விருப்பம் இல்லாதவர்கள் இந்த சின்னஞ்சிறிய லென்ஸ்களை பயன்படுத்த விருப்பப்படுகின்றனர். நோயாளியின் கண்களின் கச்சிதமான அளவுகளில் கிடைக்கும் இந்த லென்ஸ்களை மிக கவனமாக கையாள வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக இவற்றை பயன்படுத்துபவர்கள் இரவு தூங்கச் செல்லும் போது அவற்றை மறக்காமல் கண்ணில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
அப்படி, ஒரு வயதான பெண்மணி சமீபத்தில் கேத்திரீனா குர்தீவா எனும் கண் மருத்துவரை பார்க்க போயிருக்கிறார். தான் கண்ணில் வைத்த காண்டாக்ட் லென்ஸ்களை வெளியே எடுக்க மறந்துவிட்டதாக சொல்லியிருக்கிறார் அந்த பெண். இதில் அதிர்ச்சியளிக்க கூடிய விஷயம் என்னவென்றால், தினந்தோறும் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் தனது காண்டாக்ட் லென்ஸ்களை வெளியே எடுக்க மறந்திருக்கிறார். அந்த பெண்மணி. ஒருநாள் அல்ல, இப்படி 23 நாட்கள் உள்ளே இருந்த லென்ஸை வெளியே எடுக்காமல் அடுத்த லென்ஸை கண்ணிற்குள் வைத்திருக்கிறார் அந்த பெண்மணி.
இதனால் கண்ணில் வலி ஏற்படவே, மருத்துவரிடம் சென்ற அவர் விபரத்தை கூற காத்திரீனா மிரண்டு போய்விட்டார். உடனடியாக அவரது கண்ணில் இருந்த 23 லென்ஸ்களை அவர் வெளியே எடுத்திருக்கிறார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில்,"கண்ணில் உள்ள காண்டாக்ட் லென்ஸை மறந்துவிட்டு காலையில் ஒருவர் புது லென்ஸை வைப்பது மிகவும் அரிதானது. ஆனால், 23 நாட்களாக ஒரு பெண்மணி இதனை செய்திருக்கிறார். நாளை என்னுடைய கிளீனிக்கில் புதிய காண்டாக்ட் லென்ஸ்களுக்கு ஆர்டர் செய்ய வேண்டும். நான் மிகவும் கவனமாக அவரது கண்ணில் இருந்த 23 லென்ஸ்களை வெளியே எடுத்தேன். அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இந்த வீடியோவை இதுவரையில் 2.9 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும், 81,000 பேர் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர். சிலர் இந்த பதிவில்,"உண்மையாகவே ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது" என்றும்,"இவருக்கு காண்டாக்ட் லென்ஸ்க்கு பதிலாக கண்ணாடியை பரிந்துரை செய்யுங்கள்" என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்