“காப்பாத்துங்க!!”.. நோயாளி உள்ளே சென்றதும் டாக்டரிடம் இருந்து வந்த மரண ஓலம்.. எட்டிப்பார்த்தவர்களின் ஈரக்குலை நடுங்கிய ‘பதைபதைப்பு’ சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடா மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் மருத்துவரைச் சந்திப்பதற்காக காத்திருந்த நேரத்தில், “உதவி.. உதவி.. அவசர உதவியை அழையுங்கள்” என மருத்துவர் அறைக்குள்ளிருந்து கேட்ட மரண ஓலம் நோயாளிகளை நடுங்க வைத்துள்ளது.
அவ்வாறு கத்தியது வேறு யாருமல்ல மருத்துவர்தான். கனடாவின் ரெட் டீர் பகுதியில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையின் மருத்துவர் அறைக்குள் ஒருவர் சென்றிருக்கிறார். அவர் சென்ற சில நேரங்களிலேயே மருத்துவரிடம் இருந்து அலறல் சத்தம் வெளியில் இருப்பவர்களுக்கு கேட்டது.
இதனை அடுத்து இரண்டு ஆண்கள் ஓடி சென்று மருத்துவ அறைக்குள் எட்டிப் பார்த்தபோது அந்த மருத்துவர் தன்னை நோயாளி சுத்தியால் தலையில் தாக்கிக் கொண்டிருப்பதாகக் கூறி அலறுகிறார். ஆனால் அந்த அறைக் கதவை திறக்க முடியாததால், பின்னர் அங்கிருந்து ஓடி வந்த அந்த ஆண் நோயாளிகள் இருவரும் அந்த நபர் வெளியே வந்தால் தப்ப விடாமல் இருப்பதற்காக கதவைப் பிடித்துக்கொண்டு தாக்குதலை நிறுத்துவதற்கு ஏதாவது இருக்கிறதா என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளனர்.
அங்கிருந்த ஒரு தம்பதி பெப்பர்ஸ் ஸ்பிரேயை எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை வெளியேற்றியதுடன் துப்பாக்கிகளுடன் மருத்துவமனையை சூழ்ந்துகொண்டனர். அப்போது போலீசார் ஒருவர், “சுத்தியலை கீழே போடு இல்லாவிட்டால் சுட்டு விடுவேன்” என்று கூற, தாக்குதல் செய்த நபர் ரத்தம் தோய்ந்த அந்த சுத்தியலை தூக்கி அந்த போலீசார் மீது வீசி இருக்கிறார். ஆனால் சற்றே விலகியதால், போலீசார் தப்பித்துவிட்டார். மேலும் அந்த நபர் கையில் ஒரு பட்டாக்கத்தியும் வைத்திருந்தது கண்டு அதையும் கீழே போடச் சொல்லி போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பத்து போலீசாரும் உள்ளே நுழைந்து அந்த நபரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ஆனால் சுத்தியலால் தாக்கப்பட்ட மருத்துவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவர் பெயர் வெளியிடப்படாத நிலையில், அவர் மக்களிடம் மிகவும் அக்கறை காட்டக்கூடிய மருத்துவர் என்று அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் தாக்கியவர் மருத்துவரை எதற்காக இப்படிக் கோரமாக தாக்கினர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மற்ற செய்திகள்