அழிந்து போன சூப்பர் மலைகள்.. இமயமலையை விட நான்கு மடங்கு பெரியது.. ஆய்வாளர்கள் கூறும் வியக்க வைக்கும் தகவல்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் மிக நீண்ட மலைத்தொடர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது 2,300 கிலோ மீட்டர் கொண்ட இமயமலை. ஆனால், பனித்தொடர் மலையான இமயமலையை விட மிக நீண்ட மலைத்தொடர்கள் பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு உதவியதாகவும், தற்போது இதுபோன்ற மலைத்தொடர்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அழிந்து போன சூப்பர் மலைகள்.. இமயமலையை விட நான்கு மடங்கு பெரியது.. ஆய்வாளர்கள் கூறும் வியக்க வைக்கும் தகவல்கள்

என் உயிர் போனாலும் பரவாயில்ல.. எஜமானர் குடும்பத்துக்கு எதுவும் ஆக கூடாது.. நாய் எடுத்த ரிஸ்க்.. நெகிழ வைக்கும் சம்பவம்

1,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது:

பூமியின் வரலாறு முழுவதும் நீண்ட பரப்பளவு கொண்ட சூப்பர்மலைகள் உருவாவதாகவும், இது தற்போதைய இமயமலைத் தொடர்களின் (2,300 கிலோமீட்டர்) நீளத்தை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு நீளமாக இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், பூமியின் வரலாற்றில் இரண்டு முறை உருவான இந்த சூப்பர் மலைத்தொடர்கள் 2,000 முதல் 1,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மற்றும் இரண்டாவது 650 முதல் 500 மில்லியன் வரையிலான ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக குறிப்பிடப்படுகிறது.

நுனா சூப்பர் மவுண்டன்:

மேலும், ஆஸ்திரேலிய நேஷனல் யுனிவர்சிட்டியின் மாணவர் ஜியீ ஸூ என்பவர் இது கூறும்போது, 'இன்று இந்த இரண்டு சூப்பர்மலைகளைப் போல் எதுவும் இல்லை என மலைப்பாக கூறியுள்ளார். இந்த முதல் சூப்பர் மலைகள் நுனா சூப்பர் மவுண்டன் என்று அழைக்கப்படுகிறது. யூகாரியோட்கள் என்பது ஒரு நியூக்ளியஸ் உள்ள செல்கள் ஆகும். இது அத்தகைய மூலாதார செல்கள் தோற்றத்துடன் ஒத்துப்போவதால் இதிலிருந்து கூட தாவரங்கள் மற்றும் விலங்குகள் , உயிரினங்கள் இதிலிருந்து தோன்றின என அறிவியல் கூறுகிறது. அதோடு, 650 மற்றும் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இரண்டாவது, டிரான்ஸ்கோண்ட்வானன் சூப்பர்மவுண்டன் என்பது முதல் மிகப்பெரிய விலங்குகள் தோன்றுவதுடன் ஒத்துப் போவதாக உள்ளது.

Discovery of super mountains 4 times larger than Himalayas

ஆக்ஸிஜன் இல்லை:

அதோடு, மலைகள் அரிக்கப்படும் போது அதன் மூலம் கடல்களுக்கு பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கின. உயிரியல் சுழற்சிகளை சூப்பர்சார்ஜ் செய்து, பரிணாமத்தை அதிக சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். சூப்பர்மலைகள் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்திருக்கலாம். ஏனெனில், ஆரம்பகால பூமியின் வளிமண்டலத்தில் கிட்டத்தட்ட ஆக்ஸிஜன் இல்லை. வளிமண்டல ஆக்ஸிஜன் அளவுகள் தொடர்ச்சியான படிகளில் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

கணவரை போட்டு தள்ளிட்டு.. அடிக்கடி தன்னோடு போனில் பேசுவதாக கூறி வந்த மனைவி.. 11 வருடங்கள் கழித்து தெரிய வந்துள்ள உண்மை

DISCOVERY, SUPER MOUNTAINS, HIMALAYAS, இமயமலை, சூப்பர் மலைகள், மலைத்தொடர்கள்

மற்ற செய்திகள்