'இது பேரழிவு.. நெலம ரொம்ப அபாயகரமா இருக்கு!'.. பிரபல லண்டன் மருத்துவமனையில் இருந்து ஊழியர்களுக்கு வந்த ‘பகீர்’ கிளப்பும் கடிதம்!
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டனின் பிரபலமான மருத்துவமனை ஒன்று அவசர சிகிச்சைக்கு கட்டாயமாக தேவைப்படும் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்க முடியாத அபாயகரமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
உலகமே கொரோனாவால் மோசமான சூழலை சந்தித்து வரும் நிலையில் லண்டனில் பிரபல மருத்துவமனையான ராயல் லண்டன் மருத்துவமனை நிர்வாகம் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்த சூழல் குறித்த மோசமான விளைவின் நிலையை விளக்கி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறது.
அந்த மின்னஞ்சலில் ஊழியர்களிடம், “நாம் மிகவும் மோசமான பேரழிவு சூழலில் இப்போது இருக்கிறோம். கட்டாயமாக சிகிச்சை தேவைப்படும் உரிய நோயாளிகளுக்கான முறையான கவனிப்பை வழங்க முடியாத அளவுக்கான அபாயகரமான நிலைக்கு மருத்துவமனை நிர்வாகம் தள்ளப்பட்டிருக்கிறது!” என்று குறிப்பிட்டிருக்கிறது.
ஊழியர்கள் மட்டுமல்லாமல் மருத்துவர்கள் என பலரிடையே அதிர்ச்சியை கிளப்பியிருக்கும் இந்த கடிதத்தின் சில பகுதிகளை மருத்துவர்கள் தங்களுடைய சமூக ஊடகங்களில் பகிர்ந்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு தங்களுடைய கவலையையும் தெரிவித்துள்ளனர். வடக்கு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒவ்வொன்றும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் போராடி வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. சில மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லாமலல், நிர்வாகம் தத்தளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவுக்கு செவிலியர்கள் இல்லாததாகவும் செவிலியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ராயல் லண்டன் மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையாக காணப்பட்டு அதன் பின்னர்தான் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
அத்துடன் லண்டனின் பல மருத்துவமனைகள் இப்படி ஸ்தம்பிக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதை அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை மருத்துவர்கள் எழுப்பியுள்ளனர்.
மற்ற செய்திகள்