ஊர் முழுவதும் வறட்சி.. "11 கோடி வருச 'மர்மம்' வெளிய வந்துருக்கு".. ஆடி போன ஆராய்ச்சியாளர்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்ப நாடுகளில் தற்போது வெப்ப நிலை கடுமையாக வாட்டி வரும் நிலையில், நீர் நிலைகள் பலவும் வற்றி போய் வருகிறது.
அந்த வகையில், பல இடங்களில், நீர் வற்றி போயுள்ளதால், 11.3 கோடி ஆண்டுகள் மர்மம் ஒன்று வெளியே வந்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் வெப்ப அலையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். வெப்பத்தினை தவிர்க்க, அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், பிரிட்டனில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. முக்கிய நீர்நிலைகளில் நீர்ப்பிடிப்பின் அளவு கணிசமான அளவில் குறைந்திருக்கிறது.
இப்படி நீரின் அளவு, பல ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குறைந்து வரும் காரணமாக, மக்களுக்கு அறியாத பல வினோத மற்றும் ஆச்சரிய விஷயங்கள், தற்போது வெளியாகி வருகிறது. அடுத்தடுத்து சில இடங்களில், நீருக்குள் மூழ்கி போன கிராமம் குறித்தும் தகவல்கள் தெரிய வந்தது. அப்படி தான், தற்போது டெக்சாஸ் பூங்காவில், சுமார் 11.3 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டல்லாஸின் தென் மேற்கு பகுதியில் உள்ளே க்ளென் ரோஸில் உள்ள டைனோசர் பள்ளத்தாக்கு மாநில பூங்காவில் தான், 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் கால் தடங்கள், 7 டன்கள் எடையுள்ள Acrocanthosaurus மற்றும் 44 டன்கள் எடையுள்ள Sauroposeidon வகை டைனோசர்களுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. பூங்கா வழியாக ஓடும் ஆறு, வற்றி போனதன் காரணமாக, இவை வெளிப்பட்டுள்ளன. ஆற்றில் தண்ணீர் நிரம்பி, வண்டல்கள் நிரம்பி இருப்பதன் காரணமாக, அவை இத்தனை நாட்கள் கண்ணுக்கு தெரியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பண்டைய காலத்தில், கடலின் விளிம்பில் இந்த பூங்கா இருந்ததால், அந்த சமயத்தில் இங்கு இருந்த டைனோசர்கள் சேற்றில் கால் தடங்களை விட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. டைனோசர் கால் தடங்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே வேளையில், அடுத்த காலநிலை மாறி, மழை பெய்ய ஆரம்பிக்கும் போது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் கால் தடங்கள் மறைந்து விடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத அளவுக்கு ஐரோப்ப நாடுகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், இப்படி பல வியக்கத்தக்க விஷயங்கள், வெளியே தெரிந்து வரும் விஷயம், தற்போது பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.
Also Read | "இது பேட்ட பாயுற நேரம்".. தீவிர பயிற்சியில் இறங்கிய ரெய்னா.. வைரலாகும் வீடியோ.. பின்னணி என்ன??
மற்ற செய்திகள்