நூற்றாண்டோட பெஸ்ட் கோல் அடிச்சப்போ மாரடோனா போட்ருந்த டிஷர்ட்.. ஏல வரலாற்றில் புதிய சாதனை.. ஆத்தாடி இவ்வளவு கோடியா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா அணிந்திருந்த டிஷர்ட் ஒன்று 9.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (70.8 கோடி ரூபாய்) ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டோட பெஸ்ட் கோல் அடிச்சப்போ மாரடோனா போட்ருந்த டிஷர்ட்.. ஏல வரலாற்றில் புதிய சாதனை.. ஆத்தாடி இவ்வளவு கோடியா?

மாரடோனா

அர்ஜென்டினா நாட்டில் பிறந்த டியாகோ அர்மெண்டோ மரடோனா கால்பந்து உலகின் கடவுளாக கருதப்படுகிறார். கால்பந்தாட்டத்தில் இவருடைய சாதனைகள் மகத்தானவை. களத்தில் ஓயாமல் ஓடி தன்னுடைய நாட்டு அணி வெற்றிக்காக போராடிய இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், உலக புகழ்பெற்ற Hand of God மற்றும் goal of the century ஆகிய இரு கோல்களை அடித்தபோது மாரடோனா அணிந்திருந்த டிஷர்ட் கடந்த மாதம் ஏலத்திற்கு வந்தது.

2 கோல்கள்

1986 ஆம் ஆண்டு மெக்சிகோ நகரத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியும் இங்கிலாந்து அணியும் களம் கண்டன. இந்தப் போட்டியில் மாரடோனா அடித்த இரண்டு கோல்களும் உலக பிரசித்தி பெற்றவை. அந்த ஆட்டத்தில் 2-1 என அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் மாரடோனா அடித்த முதல் கோலை 'கடவுளின் கை' என்று மக்கள் அழைக்கின்றனர். அதேபோல இப்போட்டியில் அவர் அடித்த இரண்டாவது கோலை நூற்றாண்டின் சிறந்த கோல் என்று அறிவித்தது FIFA.

புகழ்பெற்ற ஏல நிறுவனமான Sotheby இந்த விற்பனையை நடத்தியது. இதுகுறித்து பேசிய இந்நிறுவனத்தின் பழங்கால பொருட்கள் சேகரிப்பு பிரிவின் தலைவர் பிராம் வாட்ச்சர்,'' விளையாட்டு உலகின் மிக முக்கியமான நினைவுப் பொருள் மாரடோனா ஜெர்சி. அவர் கோல் அடித்த நிமிடம், விளையாட்டு வரலாற்றில் சிறந்த தருணம். இதுபோன்ற ஒரு பொருளை நான் இனி ஒருபோதும் கையாள முடியாது,'' என்றார்.

9.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

ஏப்ரல் 20 ஆம் தேதி துவங்கி மே மாதம் 4 ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 9.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து இந்த புகழ்பெற்ற டிஷர்ட்டை ஒருவர் வாங்கியுள்ளதாக இந்நிறுவனம் அறிவித்திட்டுள்ளது. ஆனால், அவர் பெயர் வெளியிடப்படவில்லை. Sotheby நிறுவனத்தால் ஏலத்தில் விடப்பட்ட விளையாட்டு நினைவு சின்னங்களிலேயே இந்த டிஷர்ட் தான் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக மாரடோனாவின் இந்த டிஷர்ட் 5.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் 39.49 கோடி) அதிகமாக ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது இந்த டிஷர்ட்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

MARADONA, HANDOFGOD, AUCTION, மாரடோனா, டிஷர்ட், ஏலம்

மற்ற செய்திகள்