எப்படியாவது 'வைரத்தை' எடுத்து 'பணக்காரன்' ஆயிடணும்...! 'நம்பிக்கையோடு தேடினவங்களுக்கு...' 'சல்லி சல்லியா நொறுங்குற மாதிரி வந்த ஒரு செய்தி...' - நொந்துப்போன மக்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென் ஆப்பிரிக்காவில் வைரம் எனக் கருதி, கற்களைத் தேடி எடுத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவை படிகக் கற்கள் எனத் தெரியவந்துள்ளது.

எப்படியாவது 'வைரத்தை' எடுத்து 'பணக்காரன்' ஆயிடணும்...! 'நம்பிக்கையோடு தேடினவங்களுக்கு...' 'சல்லி சல்லியா நொறுங்குற மாதிரி வந்த ஒரு செய்தி...' - நொந்துப்போன மக்கள்...!

உலகிலேயே ஆப்பிரிக்க நாடுகளில்தான் வைரங்கள் அதிகம் காணப்படுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3,106 கேரட். உலகின் இரண்டாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் 2016ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 1,109 கேரட். உலகின் மூன்றாவது பெரிய வைரமும் போட்ஸ்வானாவில்தான் சில தினங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், தென் ஆப்ரிக்காவில் குவாசுலு நடால் மாகாண மலைப் பகுதிகளில் வைரம் கிடைக்கிறது என்ற தகவல் பரவியது. முதலில் ஒரு சிறுவனுக்கு கிடைத்தது. அந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கற்களைத் தேடி எடுத்தனர்.

அது உண்மையாகவே வைரக்கற்களா என கண்டறிய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் அவை வைரக் கற்கள் இல்லை. வெறும் படிகக் கல் தான் என, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த உண்மையை அறிந்த போது, நான்கைந்து நாட்களாக தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அரசு அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாகத் தென் ஆப்பிரிக்க மக்கள் கடுமையான வறுமையில் வாடுகின்றனர்.

வேலைகளை இழந்த காரணத்தினால் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கொரோனா தீவிரமாகப் பரவும் காலத்தில், இது போன்ற வதந்திகளை நம்பி மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி அதிகப்படியானோர் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம்' என எச்சரிக்கை விடுத்தனர்.

மற்ற செய்திகள்