'அங்க இருக்குற ஒவ்வொரு நொடியும் ஆபத்து'!.. எப்படியாவது நாட்டைவிட்டு வெளியேற... காபூல் விமான நிலையத்தில் ஆப்கானியர்கள் செய்த பதறவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க, காபூல் விமான நிலையத்திற்குள் நுழைவதற்காக ஆப்கானியர்கள் நடத்திய நூதன போராட்டம் காண்போரை கலங்கடிக்கச் செய்துள்ளது.

'அங்க இருக்குற ஒவ்வொரு நொடியும் ஆபத்து'!.. எப்படியாவது நாட்டைவிட்டு வெளியேற... காபூல் விமான நிலையத்தில் ஆப்கானியர்கள் செய்த பதறவைக்கும் சம்பவம்!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டுப் படைகள் தங்கள் இருக்கக்கூடாது என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, காபூலில் இருக்கும் குடிமக்களையும், தங்களுக்கு உதவிய ஆப்கானியர்களையும் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் வெளிநாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, 31ம் தேதியோடு வெளிநாட்டுப் படைகள் ஆப்கனை விட்டு வெளியேறினால், நாட்டை விட்டு வெளியேற தவிக்கும் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை மீட்க முடியாது என இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் எச்சரித்துள்ளன.

மேலும், ஆகஸ்ட் 31ம் தேதி அன்று அமெரிக்க இராணுவம் ஆப்கானை விட்டு முழுமையாக வெளியேறிவிடும் என அதிபர் பைடன் உறுதியளித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஆப்கானை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் ஆப்கானியர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், விமான நிலையத்திற்கு வெளியே முழங்கால் அளவு இருக்கும் கழிவுநீர் ஓடையில் இறங்கிய நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள், தங்கள் ஆவணங்களை அசைத்து, உள்ளே விடுமாறு கெஞ்சும் மனதை உருக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

மற்ற செய்திகள்