"இவரு எங்க அப்பா.. ஆனா அவருக்கு அது தெரியாது".. மறதி நோயால் பாதிக்கப்பட்ட நபர்.. கண்கலங்க செய்யும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்மறதி நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையுடன் உரையாடும் வீடியோவை மகள் சோசியல் மீடியாவில் பகிர பலரையும் இந்த வீடியோ கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
பொதுவாக வயதான நபர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் ஒன்றாக டிமென்சியா எனும் மறதி நோய் கருதப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அன்றாட வாழ்வு குறித்தும் உற்றார் உறவினர் குறித்தும் கூட மறந்து விடும் நிலையில் இந்த முதியவர்களை கவனித்துக் கொள்வது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை. இது பெரும் உழைப்பைக்கோரும் செயல் என்றாலுமே கூட அதை செய்ய பேரன்பு கொண்ட மனதுடையவர்களால் மட்டுமே முடியும்.
அப்படி ஒரு சூழ்நிலையில் மறதி நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையுடன் உரையாடுகிறார் ஒரு மகள். அப்போது தனது தந்தையிடம் உங்களது ஸ்கூபா டைவிங் அனுபவம் பற்றி சொல்லுங்கள் என கேட்கிறார் அந்தப் பெண்மணி. அதற்கு அந்நியர் ஒருவரிடத்தில் பேசுவது போல பதில் கூறுகிறார் அவருடைய தந்தை. ஸ்கூபா டைவிங் தனக்கு பிடித்தமான வேலையாக இருந்ததாகவும் அது தொழில்முறையாக தான் செய்து வந்ததாகவும் தெரிவிக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
தொடர்ந்து தன்னுடைய மனைவியின் பெயரை சரியாக குறிப்பிடும் அவர் எல்லா தம்பதிகள் இடையேயும் வரும் வாக்குவாதம் ஏற்படுவதை போல தானும் வாக்குவாதம் செய்திருப்பதாகவும் கூறுகிறார். தொடர்ந்து தான் மனைவியை பிரிந்து விட்டதாகவும் கவலையுடன் தெரிவிக்கிறார். அதன்பின்னர் தன்னுடைய மகள்களின் பெயரை குறிப்பிடும் அவர் அவர்கள் புத்தி கூர்மை உடைய அறிவாளியான குழந்தைகள் எனவும் நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
பின்னர், ஒவ்வொரு முறையும் தனது மகள்களை பிரியும்போதும், தனக்கு அழுகை வந்துவிடும் எனவும் அதுவே அவர்கள் மீது தான் கொண்ட பாசத்தின் சாட்சி என்றும் உருக்கமாக தெரிவிக்கிறார். தொடர்ந்து பேசும் அவர் தனது மகள்களும் தன்மீது பாசத்துடன் இருப்பதை தன்னால் உணர முடிகிறது என்றும் சொல்ல, அவரது அருகில் இருந்த மகள் தனது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ பலரையும் இந்த வீடியோ கண்கலங்க செய்திருக்கிறது.
TikTok really got me crying pic.twitter.com/xGG6u6bwyi
— KTheMan (@PillowPrincesse) January 21, 2023
மற்ற செய்திகள்