'எப்பா, எதிரிக்கு கூட இந்த கஷ்டம் வர கூடாதுடா சாமி'... '24 வருஷம் கழிச்சு வந்த நல்ல செய்தி'... ஆனா அத பாக்க நீ உயிரோட இல்லையேபா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நமக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் நம்மை விட அதிகம் துன்பப்படுபவர்களை நினைத்துக் கொண்டால் நமது துன்பம் பெரிதாகத் தெரியாது எனக் கூறுவார்கள். அந்த வகையில் ஒரு தீவே 24 வருடங்கள் பட்ட துயரத்தை விளக்குகிறது இந்த செய்திக் குறிப்பு.

'எப்பா, எதிரிக்கு கூட இந்த கஷ்டம் வர கூடாதுடா சாமி'... '24 வருஷம் கழிச்சு வந்த நல்ல செய்தி'... ஆனா அத பாக்க நீ உயிரோட இல்லையேபா!

கனடா நாட்டிற்குச் சொந்தமாக Shoal Lake First Nation #40 என்ற தீவு ஒன்று உள்ளது. அந்த தீவிற்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி கிடையாது. கோடைக்காலத்தில் படகு மூலமாக மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் குளிர் காலத்தில் நிலைமை இன்னும் மோசம். குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்துவிடுவதால் அப்போது அங்குப் பயணம் செய்வது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

Decades-old water advisory lifted for First Nation

இப்படிப் பட்ட தீவில் குடிப்பதற்கு மட்டும் நல்ல தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியுமா என்ன. ஆம், அங்குக் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் என்பதே கிடையாது. இதனால் Alfred Redsky என்பவர் சுத்தமான குடி தண்ணீருக்காக நீண்ட காலமாகப் போராடி வந்துள்ளார். ஆனால் அவ்வளவு எளிதில் தண்ணீர் வந்து விடவில்லை. 24 வருடங்கள் கழித்து தற்போது தான் சுத்தமான குடிதண்ணீர் அந்த தீவிற்கு வந்துள்ளது.

இதில் துரதிஷ்டம் என்னவென்றால், Alfred Redsky எதற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடினாரோ அதை அனுபவிக்க முடியாமலே இறந்து போனார். ஆம், நல்ல தண்ணீர் கேட்டுப் போராடிய Alfred Redsky, அந்த தண்ணீரைக் குடிக்கும் பாக்கியம் கிடைக்காமல் போனது தான் சோகத்தின் உச்சம்.

Decades-old water advisory lifted for First Nation

இதுகுறித்து பேசிய Alfred Redskyயின் மகள், Angelina McLeod, ''சுத்தமான குடிதண்ணீர் இல்லாமல் பலர் நோய்வாய்ப்பட்ட நிலையில், அடிப்படை வசதி கூட இல்லாத அந்த தீவில் வாழ்ந்த மக்களுக்கு ஒரு வேளை நாம் மற்றவர்களை விடக் கீழானவர்கள் போல. அதனால் தான் நமக்கு நல்ல தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்ற எண்ணம் கூட வந்திருக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.

Decades-old water advisory lifted for First Nation

இதற்கிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்தில் தான் அந்த தீவில் முதன்முறையாக ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் துவங்கிய நிலையில் முதன்முறையாக மக்கள் குழாய்களில் வரும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

24 வருடம் நல்ல தண்ணீருக்காகக் காத்திருந்த மக்களுக்கு தற்போது நல்ல செய்தி வந்த நிலையில் அதற்காகப் போராடிய Alfred Redsky பார்க்க உயிரோடு இல்லை என்பது தான் சோகத்தின் உச்சம்.

மற்ற செய்திகள்