"விடிந்தால் மரண தண்டனை.. 'இனிமே சாப்பிடவே மாட்டேன்யா'.. கைதியின் கடைசி ஆசை.. விக்கித்துப் போன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் மரண தண்டனை கைதி ஓருவர் தனது கடைசி ஆசையாக விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மரண தண்டனை
அமெரிக்காவின் தென்கிழக்கு ஓக்லஹோமா நகரத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஆல்டர்சன் (57), டெர்ரி ஸ்மித் (56), டோனி ஸ்விண்டில் (49) மற்றும் ஏமி ரைட் (26) ஆகியோரை நான்கு பேர்கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையின் பலனாக கில்பர்ட் போஸ்ட்டல்லே என்பவரை காவல்துறை கைது செய்தது.
விசாரணையில் தனது தந்தைக்கு நேர்ந்த வாகன விபத்திற்கு காரணமாக இருந்தவர்களை பழிவாங்க இவ்வாறு செய்ததாக கில்பர்ட் தெரிவித்திருக்கிறார். வாகன விபத்தால் கில்பெர்ட்டின் தந்தை வாழ்நாள் ஊனமடைந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நீதிமன்ற விசாரணையின் போது கில்பெர்ட்டிற்கு மரணதண்டனை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதனை அடுத்து ஓக்லஹோமா சிறையில் கில்பெர்ட் அடைக்கப்பட்டார்.
கடைசி ஆசை
இந்நிலையில், பிப்ரவரி 17 ஆம் தேதி, கில்பெர்ட்டிற்கு லெதால் ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருந்தது. இதனையடுத்து, இறுதியாக தனக்குப் பிடித்த உணவுகளை சாப்பிட அனுமதிக்கவேண்டும் என கில்பெர்ட் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. அவரது கோரிக்கைக்கு சிறை நிர்வாகமும் ஓகே சொல்லியிருக்கிறது.
இதனை அடுத்து தனக்கு பல வகை சாஸ்களுடன் கூடிய 20 சிக்கன் நக்கெட்ஸ், க்ரிஸ்ப்பி சிக்கன் சான்ட்விச், கேரமல் ஃப்ராப்பே ஆகியவற்றை ஆர்டர் செய்திருக்கிறார் கில்பெர்ட். இதனை சிறை அதிகாரிகளும் வாங்கி கொடுத்திருக்கின்றனர். தனது கடைசி நாளில் மட்டும் கில்பெர்ட் 3,872 கலோரிகளை அந்த உணவின் மூலம் எடுத்துக்கொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
தண்டனை நிறைவேற்றம்
இதனை அடுத்து நீதி மன்ற உத்தரவின்படி பிப்ரவரி 17 ஆம் தேதி லெதால் ஊசி மூலம் கில்பெர்ட்டிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தன்னுடைய கடைசி நாளில் சுமார் 4000 கலோரி உணவுகளை கைதி ஒருவர் உணவாக உட்கொண்டது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
மற்ற செய்திகள்