'பெத்த பொண்ண இப்படி செய்ய மனசு வலிக்கல?'... 'அந்த தகப்பனுக்கு இதுவா தண்டனை'?... 'யார் இந்த 'ரோமினா'.... தூக்கத்தில் நடந்த கொடூரம் என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனா குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தாலும் தற்போது, உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு, சிறுமி ரோமினா அஷ்ரப் கௌரவக் கொலை செய்யப்பட்டது தான்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடக்கு மேற்கு பகுதியில் வசித்து வரும் ரேசா அஷ்ரப் என்பவரது மகள் தான் ரோமினா அஷ்ரப். 14 வயது சிறுமியான ரோமினா காதல் வயப்பட்டு, அந்த நபருடன் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் போலீசார் அவர்களை மீட்ட நிலையில், ரோமினாவை அவரது தந்தையுடனே அனுப்பி வைத்தனர்.
அவர் மகளிடம் அமர்ந்து பேசி, அவரை நல்வழிப்படுத்தாமல், தன்னுடைய சொந்த மகள் என்று கூட பாராமல், நடு இரவு ரோமினா தூங்கிக்கொண்டிருக்கும் போது, அவளின் தலையை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்த கொடூர கொலையை ஈரான் ஊடகங்கள் ஆணவக்கொலை எனக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள ரேசா அஷ்ரப், குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டால் ஈரானின் சட்ட விதிப்படி அவருக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
தற்போது ரோமினாவின் மரணம் ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதைவிடக் கடுமையான தண்டனை அவருக்கு வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். ரோனிவின் மரணத்துக்கு நீதி கேட்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும் சமூக வலைத்தளங்களில் பலரும் #RominaAshrafi என்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே சிறுமிக்கு நடந்த ஆணவக் கொலை குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வருத்தம் தெரிவித்துள்ளார். ஈரான் அரசு முறையான விசாரணை நடத்தும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் ரோமினாவின் முகத்தில் இருக்கும் அந்த புன்சிரிப்பைப் பார்த்துமா அவரது தந்தை இந்த பாதக செயலை செய்தார் எனப் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்




