'இத ஆரம்பத்துலயே கண்டுபிடிக்கலன்னா ரொம்ப கஷ்டம்?!!'... 'அமெரிக்காவில் கொரோனாவுக்கு நடுவே'... 'அச்சத்தை கிளப்பியுள்ள புதிய நோய் பாதிப்பு!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் ஒரு புதிய நோய் பரவத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் மூளையை சாப்பிடும் நெக்லரியா ஃபோலெரி (Naegleria Fowleri) எனும் அமீபா பாதிப்பு பரவத் தொடங்கி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அமெரிக்காவின் (America) தென் மாநிலங்களில் இந்த அமீபா பாதிப்பு பரவி வருகிறது. அதன் தொற்றுக்கு காலநிலை மாற்றம் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. பொதுவாக ஏரிகள், ஆறுகள் மற்றும் சூடான நீரூற்றுகள் போன்ற இடங்களில் அதிகம் காணப்படும் இந்த மூளையை சாப்பிடும் அமீபா நோய் தாக்கினால், உடல் செயலிழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இப்போது இது வட அமெரிக்க மாநிலங்களிலும் பரவத் தொடங்கியுள்ளதென அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது. மேலும் இதன் மூலம் பரவும் தொற்று நோய் மிகவும் ஆபத்தானது, இதனால் மரணம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், தொற்று சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடுமையான தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகியவையே நெக்லூரியா ஃபோலரி நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகளாகும். இது தவிர கழுத்து விறைப்பு, வலிப்பு ஏற்படுதல், மன நோய் மற்றும் கோமா ஆகியவை இந்த நோய் பாதிப்பால் ஏற்பட்டலாமெனக் கூறப்படுகிறது. அமெரிக்கா இன்னும் கொரோனாவிலிருந்தே மீளாத நிலையில், இந்த ஆபத்தான தொற்று நோய் பரவல் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்