தூக்கத்தில் உருவாகும் 'மர்ம' நோய்...! 'நூறு வருஷத்துக்கு ஒரு தடவ தான் இந்த மாதிரி நோய் உருவாகும்...' - கலக்கத்தில் மருத்துவர்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இறந்தவர்களெல்லாம் கனவில் வரும் இந்த மர்மமான மூளை நோய்க்கு இதுவரை ஆறு பேர் பலியாகி உள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய கனடாவின் சின்னஞ்சிறிய மாகாணமான நியூ புருன்ஸ்விக் பகுதியில் மட்டுமே இந்த மர்ம நோய் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கமின்மையும், அப்படியே தூங்கினாலும் கூட மரணமடைந்தவர்களெல்லாம் கனவில் வருவதாக சொல்கின்றனர். இந்த நோய்க்கான காரணத்தை கண்டறியும் பணியில் இரவு, பகல் பாராமல் கனடா நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பெயரிடப்படாத மூளைநோயால் இதுவரை 48 பேர் பாதிக்கபட்ட நிலையில், அவர்களில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் நீண்ட காலம் இது குறித்த ஆராய்ச்சி செய்து வந்தாலும், இந்த நோய்க்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
மேலும், இந்த நோய் சுற்றுப்புற சூழல் காரணமாக பரவுகிறதா? மரபு ரீதியாக பரவுகிறதா?, மான் கறி அல்லது மீன், இறைச்சி சாப்பிடுவதால் பரவுகிறதா? என பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இதுவரை எந்த விடையும் கிடைக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நரம்பியல் நிபுணரான நீல் கேஷ்மேன் கூறுகையில், நூற்றாண்டுகளில் ஒரு முறை தான் இது போன்ற நோய் ஏற்படும் என கூறினார். மேலும் இந்த நோயானது 18 வயது முதல் 84 வயது வரை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
6 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நோய்க்கு தற்போது வரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்பது கனடா மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்