'அப்பா வரமாட்டாருடி தங்கம்'... 'சவப்பெட்டியை சுற்றி வந்த பிஞ்சு'...நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலிய காட்டு தீக்கு பலியான தீயணைப்பு வீரரின் மகள், தந்தை இறந்தது தெரியாமல் அவரது சவப்பெட்டியை சுற்றி வந்த நிகழ்வு உலகையே உலுக்கியுள்ளது.
2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கிய காட்டு தீ, மில்லியன் கணக்கிலான ஹெக்டேர் வனப்பகுதியை நாசமாகி கொண்டு இருக்கிறது. இந்த காட்டு தீயில் சிக்கி அரியவகை தாவரங்கள், மரங்கள் மற்றும் 50 கோடிக்கும் மேலான விலங்குகள் பரிதாபமாக மடிந்துள்ளன. 20க்கும் மேற்பட்ட மனிதர்களின் உயிரையும் காட்டு தீ வாங்கியுள்ளது.
இந்நிலையில் நெருப்பை அணைக்க ஆஸ்திரேலியாவின் தீயணைப்புப்படை மொத்தமும் களத்தில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தில் இரண்டு தீ அணைப்பு வீரர்களும் வீர மரணம் அடைந்துள்ளார்கள். இரு வீரர்களும் கடந்த 19ம் தேதி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காட்டு தீயானது அவர்களின் உயிரை பறித்து கொண்டது. தீ அணைக்கும் வீரர்கள் என்பதை தாண்டி இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவருமே ஒன்றரை வயது குழந்தைக்கு தந்தை.
கியாட்டன் என்ற வீரரின் உடல் கடந்த வாரம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆண்ட்ருவின் உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது மகள் சார்லெட் தந்தை வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியினை சுற்றி வந்தாள். தனது தந்தை அந்த பெட்டிக்குள் இருக்கிறார் என்பது, அந்த பிஞ்சு குழந்தைக்கு தெரிந்திருந்த போதும் அவர் உயிரோடு இல்லை என்பது அந்த பிஞ்சுக்கு தெரியவில்லை.
ஒரு கையில் பிஸ்கேட்டும் மற்றோரு கையில் தனது தந்தையின் ஹெல்மட்டையும் வைத்து கொண்டு, அப்பா நிச்சயம் எழும்பி வருவார் என்ற நம்பிக்கையில் அந்த குழந்தை அந்த இடத்திலேயே இருந்தது. இது அங்கிருந்தவர்கள் நெஞ்சை ரணமாக்கியது.
இறுதியாக தந்தையின் சவப்பெட்டிக்கு இறுதி முத்தம் கொடுத்த அந்த குழந்தைக்கு, தியாகத்தை குறிக்கும் வகையில் பதக்கம் ஒன்று அணிவிக்கப்பட்டது. இன்று அந்த பிஞ்சு குழந்தை தனது தந்தை நிச்சயம் வந்து விடுவார் என்ற நம்பிக்கை ஏமாற்றத்தில் முடியலாம். ஆனால் ஒரு நாள் வரும், அப்போது எனது தந்தை ஒரு நிஜ ஹீரோ, அவரது தியாகத்தை இந்த உலகமே போற்றியது என்பதை அறியும் போது அவளது கண்கள் குளமாகும், அதோடு ஆனந்த கண்ணீரும் வரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை