Naane Varuven M Logo Top

மகனை Divorce செய்ய நினைத்த மருமகள்.. காரில் Follow செய்த மாமனார்.. பெண்ணின் கடைசி போன் காலில் துலங்கிய துப்பு!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் இந்திய வம்சாவளி அமெரிக்கர் சிடல் சிங் தோசாஞ். இவருக்கு தற்போது 74 வயதாகிறது.

மகனை Divorce செய்ய நினைத்த மருமகள்.. காரில் Follow செய்த மாமனார்.. பெண்ணின் கடைசி போன் காலில் துலங்கிய துப்பு!!

Also Read | Miss TamilNadu வென்ற கூலி தொழிலாளி மகள்.. தடையை தாண்டி சாதிச்சது எப்படி??.. Exculsive!!

இவரது மருமகளான குர்ப்ரீத் கவுர் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, வால்மார்ட் அருகேயுள்ள கார் பார்க்கிங் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

சிடல் சிங்கின் மகனை குர்ப்ரீத் கவுர் திருமணம் செய்திருந்தார். ஆனால், அவர்கள் இடையே உருவான கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்யவும் குர்ப்ரீத் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, சிடல் சிங் மற்றும் அவர் மகன் ஆகியோர் ஃப்ரெஸ்னோ என்னும் பகுதியில் வசித்து வந்துள்ளனர். குர்ப்ரீத் கவுர் சான் ஜோஸ் என்னும் பகுதியில் வசித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், தனது உறவினர் ஒருவரிடம் குர்ப்ரீத் கவுர் பேசிய விஷயம் தான் இந்த வழக்கின் திருப்புமுனையாக அமைந்துள்ளது. உயிரிழந்த பெண்ணான குர்ப்ரீத், உயிரிழப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பாக தனது உறவினர் ஒருவரிடம் மொபைலில் பேசி உள்ளார். தனது மாமனாரான சிடல் சிங், தன்னை தேடுகிறார் என பயத்துடன் கூறி உள்ளார். தனது காரை பின்பற்றி  மாமனார் சிடல் வருவதாகவும் தன்னை தேடி சுமார் 240 கிலோ மீட்டர் வந்துள்ளதாகவும் அச்சத்துடன் குர்ப்ரீத் தெரிவித்துள்ளார்.

daughter in law life ends by her father in law

இது பற்றி குர்ப்ரீத் பேசிய உறவினரிடம் விசாரித்த போது, கடைசியாக தன்னிடம் அவர் பேசிய போது பயத்தில் இருந்ததாகவும், சிடல் தனது காரை நெருங்கி வருவதாகவும் குறிப்பிட்டிருந்ததை உறுதி செய்தார். மேலும், தனது உறவினரிடம் குர்ப்ரீத் பேசி முடித்த ஐந்து மணி நேரம் கழித்து, அவருடன் பணிபுரியும் பெண் ஒருவர் கார் பார்க்கிங்கில் இரண்டு துப்பாக்கி குண்டு காயங்களுடன் குர்ப்ரீத் இறந்து கிடப்பதை பார்த்துள்ளார். மேலும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவியை பரிசோதித்த போது சிடல் சிங் காரில் நுழைவது தெரிய வந்தது. இதன் பின்னர் சிடல் சிங்கை கைது செய்த போலீஸ், அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியையயும் பறிமுதல் செய்தனர். மகனை விவாகரத்து செய்ய முடிவு செய்ததற்காக மருமகளை மாமனாரே சுட்டுக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | "பெத்தவங்களோட விவசாயத்தை கையில எடுத்தோம்".. ஐடி வேலையை உதறிவிட்டு களத்தில் குதித்த பட்டதாரிகள்!!.. அடுத்து நடந்த அற்புதம்!!

DAUGHTER IN LAW, FATHER IN LAW, DIVORCE

மற்ற செய்திகள்