திடீரென கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடி வந்த ‘அண்ணன்’... ‘அப்பாவால்’... ‘தங்கைக்கு’ நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தன் தாயை அடித்துத் துன்புறுத்திய தந்தையைத் தடுத்த மகளின் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தந்தையே கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடி வந்த ‘அண்ணன்’... ‘அப்பாவால்’... ‘தங்கைக்கு’ நேர்ந்த கொடூரம்!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி அன்னா க்ரிட்ஸ்கா (Anna Krytska). இவர் தன் தாய் நடாலியா, தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வந்தார். மதுவுக்கு அடிமையான அன்னாவின் 38 வயதான தந்தை, தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், இதேபோல் குடித்துவிட்டு வந்து தாயை அடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த மகள் அன்னா, தந்தையை ஓடிவந்து பின் பக்கமாக பிடித்துக்கொண்டு ‘அம்மாவை இனிமேல் நீங்க அடிக்கக் கூடாது’ என்று கூறினாள்.

இதனால் கோபமடைந்த தந்தை, மகள் அன்னாவை தள்ளிவிட்டுவிட்டு வெளியே சென்று விட்டார். வெளியே எங்கேயோ சென்று விட்டார் என்று தாயும், மகளும் நினைத்துக் கொண்டிருந்த போதுதான், ஒரு கேனில் பெட்ரோலுடன் வந்த சில நிமிடங்களில் திரும்பிய அன்னாவின் தந்தை, மகள் அன்னாவின் அறை முழுவதும் பெட்ரோலை ஊற்றியுள்ளார். பின்னர், மகளின் முகத்தில் பெட்ரோலை ஊற்றிய அவர், தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி, வாசலுக்கு போய் நின்றுகொண்டார். தங்கை அன்னாவின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டுக்கு வெளியிலிருந்த அவரது அண்ணன் ஓடி வந்து அன்னாவைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 

தற்போது முகத்தில் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு 16 வயது சிறுமி அன்னா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அன்னாவின் சகோதரர் கூறுகையில், ‘வீட்டில் நடந்த எதுவும் எனக்குத் தெரியாது. நான் வெளியில் நின்றுக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென அன்னாவின் அலறல் சத்தம் கேட்டது. உள்ளே சென்றுப் பார்த்தபோது, அவளது முகம் மற்றும் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. உடனே அவளை நான் வெளியில் இழுத்து வந்து அங்கு சிதறிக்கிடந்த பனிக்கட்டிகளை அன்னாவின் முகத்தில் வீசி தீயை அணைத்தேன்.

அப்போது என் அப்பா அருகில் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் உதவி செய்யுமாறு நான் கெஞ்சினேன். அதற்கு அவர், `இவள் எரிந்தாலும் எனக்குக் கவலையில்லை’ என்று கூறி அமைதியாக நின்றார். பிறகு அருகில் உள்ளவர்களின் உதவியுடன் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அன்னாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அன்னாவின் முகம், கழுத்து, கை மற்றும் தலை ஆகிய பகுதிகள் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளன’ என்றார். 

அன்னாவின் முகத்தில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட இடத்தை நீக்கிவிட்டாலும், அவருக்கு சில பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அன்னாவின் மருத்துவத்துக்குத் தேவையான பணத்தை அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கொடுத்து வருகின்றனர். மகள் முகத்தின் மீதே பெட்ரோல் ஊற்றி கொடூரமாக எரித்த  அன்னாவின் தந்தையைக் கைது செய்துள்ள உக்ரைன் போலீஸ் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

FIREACCIDENT, FATHER, MOTHER, BROTHER