‘பரிதவித்த 2 வயது குழந்தை’... ‘இதயமில்லாத கொடூர தந்தை செய்த’... 'அதிர்ச்சி காரியம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்மரணப்படுக்கையில் இருக்கும் 2 வயது மகனின் சிகிச்சைக்காக இருந்த பணத்தை திருடி, விபசார விடுதி தொடங்கிய தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் சால்வடார் பகுதியில் குடியிருந்து வந்தவர் 37 வயதான மேட்டஸ் ஆல்வ்ஸ். இவர் வேலை எதுவும் இன்றி இருந்து வருகிறார். இந்நிலையில், இவரது 19 மாதமே ஆன குழந்தை, அரியவகை நோயால் அவதிப்பட்டு வருகிறது. குழந்தையின் முதுகு தண்டுவடம் அருகே, ஒருமுறை ஊசியின் மூலம் மருந்து செலுத்துவதற்கு 81,000 பவுண்டுகள் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் குழந்தைக்கு 6 முறை ஊசி செலுத்தவேண்டியுள்ளது. தற்போது குழந்தையின் சிகிச்சைக்காக, சுமார் 216,000 பவுண்டுகள் குடும்பத்தார் வங்கியில் சேமித்து வைத்துள்ளனர்.
இந்த தொகையானது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் பொதுமக்களிடம் இருந்து சேகரித்தது எனவும் கூறப்படுகிறது. குழந்தையின் உயிரை காக்க போதுமான பணம் இன்றி தவித்துவந்த நிலையில், அந்தப் பணத்தில் இருந்து சுமார் 130,000 பவுண்டுகள் அளவு பணத்தை, தந்தை ஆல்வ்ஸ் திருடி சென்று செலவிட்டுள்ளார். அதுவும் விலைமாதர்களுடனும், போதை மருந்துக்கும், மதுவுக்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும், அந்த பணத்தை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கடந்த ஒருமாத காலமாக தலைமறைவாக இருந்த அவரை, சால்வடாரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கடந்த ஜூலை 22-ம் தேதி கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பணத்தில் சுமார் 11,000 பவுண்டுகளை விபசார விடுதி ஒன்றை துவங்க, நண்பர்களுடன் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விலை உயர்ந்த பொருட்களும், போதை மருந்தும் வாங்கி பயன்படுத்தியுள்ளதாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Heartless father steals thousands of pounds from fund intended for his sick baby's treatment and spends it on prostitutes, booze and drugs https://t.co/8dMqV9iTGS
— Daily Mail Online (@MailOnline) August 2, 2019