VIDEO: 'நீங்க இடம் கொடுக்கலன்னா யாரும் உங்கள உடைக்க முடியாது...' 'முயல தோக்கடிச்சது அந்த காலம்...' 'இப்போ யாருன்னு தெரியுதா...' - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

முதலை ஒன்று ஆமையை விழுங்க முயன்று தோற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

VIDEO: 'நீங்க இடம் கொடுக்கலன்னா யாரும் உங்கள உடைக்க முடியாது...' 'முயல தோக்கடிச்சது அந்த காலம்...' 'இப்போ யாருன்னு தெரியுதா...' - வைரல் வீடியோ...!

ஆமை முயலை தோற்கடித்த கதையை போல, இப்போது முதலையையும் தோற்கடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

இந்திய வருவாய் சேவை அதிகாரியான நவீத் ட்ரம்பூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் வீடியோவுடன், 'இந்த உலகில் வாழ கடினமான தோலும், வலிமையான புத்தியும் தேவை. நீங்கள் இடம் கொடுக்காவிட்டால் யாரும் உங்களை உடைத்துவிட முடியாது - யாரோ' என்ற வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பகிர்த்துள்ள அந்த வீடியோவில் முதலை ஒன்று ஆமையை கடிக்க முயற்சி செய்யும் போது, ஆமை ஓடுகளின் வலிமையால் அதனை சாப்பிட முடியாமல் முதலை தவிக்கிறது. எப்படியோ ஒருவழியாக கடைசியில் ஆமை முதலையிடம் இருந்து தப்பித்து ஓடுகிறது.

இந்த வீடியோவில் பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்