“ஆபீஸ் ஜூம் மீட்டிங்ல ஆடு பங்குபெறுதா?”.. 'மொத்த வாழ்வையும் முடக்கிய லாக்டவுன்!'.. ‘நம்பவே முடியாத’ ஐடியாவை வைத்து.. அடி ‘தூள்’ பண்ணிய பெண்!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தின் Lancashire என்கிற பகுதியை சேர்ந்த பண்ணையில் ஆடுகளை வளர்த்து வந்தார் Dot McCarthy.
இவரது பண்ணையில் திருமணங்கள் மற்றும் கல்வி சுற்றுலாக்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் கொரோனா முடக்கம் எல்லாவற்றையும் கபளீகரம் செய்துவிட்டது. வருமானத்துக்கு என்ன செய்யலாம் என Dot McCarthy யோசித்தபோது தான் இந்த நகைச்சுவையான யோசனை தோன்றியதாக தெரிவிக்கிறார்.
இந்த பண்ணையின் உரிமையாளரும் விவசாயியுமான Dot McCarthy-யின் இப்படி நகைச்சுவையாக தொடங்கிய ஒரு யோசனைதான் தற்போது விரிந்து பெரும் லாபம் ஈட்டக்கூடிய தொழிலாக வளர்ந்திருக்கிறது. நாளொன்றுக்கு நூறு ஜூம் கால்கள் வரை தற்போது வழங்கி வருகிறார். இதில் 10 நிமிட சந்திப்புக்கு 6 பவுண்ட் என கட்டணம் வசூலிக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா முடக்கம் அறிவிக்கப்பட்டதும் என்ன செய்வது என தெரியவில்லை என்று சோர்ந்துபோன Dot McCarthy தனது வலைத்தளத்தில் இந்த ஐடியாவை பதிவிட்டார்.
மறுநாள் காலையில் இவருக்கு இன்ப அதிர்ச்சிதான் நடந்தது. ஆம், ஆடுகளை ஜூம் கால்களுக்கு அழைக்கும் சேவையை வழங்க 200 பேர் இவருக்கு மின்னஞ்சம் மூலம் கோரிக்கையாக முன்வைத்தனர். இது சற்று வித்தியாசமானதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக Dot McCarthy கூறுகிறார். சீனா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த ஆன்லைன் சந்திப்பை தற்போது நடத்தி வருகிறார்.
இவரது வலைதளத்திற்கு சென்று அவருடைய எந்த ஆண்டு நமது மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே ஒருவர் தேர்வு செய்துகொள்ளலாம். அந்த ஆடுகளின் பெயர், தவிர, நீங்கள் எதிர்பார்க்கும் அந்த ஆட்டை பற்றிய பெயர் உள்ளிட்ட விபரங்கள் என சகலத்தையும் குறிப்பிட வேண்டும். நண்பர்கள், குடும்பத்தில் இருக்கும் யாருடனும் மீட்டிங்கை நடத்த ஒரு ஆட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆட்டின் கழுத்தில் நாம் சொல்ல வேண்டிய செய்தியை எழுதச்செய்து உரிய நபர்களிடம் வீடியோ கால்கள் மூலம் சென்று சேர்க்கலாம்.
"One day your Goats will be on @5_News for joining video calls" said not even the wackiest fortune teller ever. When life is crackers, just goat with the flow 😆🤯🐐 @CronkshawFold https://t.co/0EEwKs1HOY
— Dot McCarthy (@DotMcCarthy) January 29, 2021
இத்துடன் ஆடுகளை அலுவலக சந்திப்புகளில் காண்பிக்க வேண்டும் என்றும் சில பேர் விரும்புகின்றனர். ஏனென்றால் அலுவலக பணியை வீட்டுக்குள்ளே இருந்து செய்து கொண்டு இருக்கும் இந்த வறட்சியான கொரோனா காலத்தை குதூகலமாக மாற்ற இப்படி செய்ய பலரும் விரும்புகின்றனர்.
Dot McCarthy மட்டுமல்ல, தற்போது பல பகுதிகளில் இப்படி ஆடுகளையும் பிற விலங்குகளின் ஜூம் மீட்டிங்குகளில் பங்கெடுக்கும் வர்த்தகம் விரிவுபடுத்தப்பட்டு வருவதை காணமுடிகிறது. இந்த காலத்தில் முடங்கிக் கிடக்காமல், கிடைத்த வாய்ப்புகளையும், தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி Dot McCarthy இப்படி ஒரு புத்திசாலித்தனமான யோசனை செயல்படுத்திக் காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்