RRR Others USA

ரொம்ப நேரமா வலிச்சுக்கிட்டே இருந்த காது.. கடலுக்குள்ள நீச்சலடிக்க போன பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஆசையாக கடலில் நீச்சலடிக்க சென்ற பெண்ணிற்கு கடுமையான காது வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது காதை பரிசோதித்த அவரது நண்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ரொம்ப நேரமா வலிச்சுக்கிட்டே இருந்த காது.. கடலுக்குள்ள நீச்சலடிக்க போன பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முடிவுக்கு வருமா இலங்கை நெருக்கடி? .. புதிதாக பதவியேற்ற நிதியமைச்சர் எடுத்த பரபரப்பு முடிவு..!

அமெரிக்கா அருகே உள்ள போர்டோ ரிக்கோ தீவு, அதன் அழகான கடற்கரைகளுக்கு பெயர்போனது. இந்த குட்டி தீவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலாவுக்காக செல்கின்றனர். அப்படி தனது விடுமுறையை கழிக்க போர்டோ ரிக்கோ தீவுக்கு சென்ற டெய்சி வெஸ் என்ற பெண்ணிற்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

Crab Gets Stuck In Woman Ear While Snorkelling

கடல் நீச்சல்

விடுமுறையை உற்சாகமாக கழிக்க திட்டமிட்டு போர்டோ ரிக்கோவிற்கு சென்ற டெய்சி அங்கே Snorkelling செய்திருக்கிறார். அதாவது, கடலுக்குள் சுவாசிக்கும் வகையில் பிரத்யேக கருவிகளின் துணையுடன் நீச்சலடிப்பதே Snorkelling எனப்படுகிறது. ஆனந்தமாக கடலில் குளித்துக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென காதுக்குள் ஏதோ போனதுபோல வலிக்க துவங்கியிருக்கிறது டெய்சிக்கு.

இதனால் உடனடியாக கரைக்கு வந்த டெய்சி, தலையை குலுக்கி காதில் நுழைந்ததை வெளியே எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்த முயற்சிகள் ஏதும் பலனிக்கவில்லை. அதன் பிறகு அவரது நண்பரிடம் விஷயத்தை கூற, அவர் காதில் கம்பி போன்ற ஒரு கருவியை விட்டு உள்ளே என்ன இருக்கிறது என பரிசோதித்திருக்கிறார்.

Crab Gets Stuck In Woman Ear While Snorkelling

நண்டு

டார்ச் வெளிச்சத்தில் பார்த்தபோது, டெய்சியின் காதிற்குள் ஒரு நண்டு இருப்பதை அவரது நண்பர் பார்த்திருக்கிறார். இரண்டு முறை முயற்சி செய்தும், அவரால் அந்த குட்டி நண்டை வெளியே எடுக்க முடியவில்லை. இறுதியாக மூன்றாவது முறை கம்பியால் அந்த நண்டை எடுக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் போது நண்டு வெளியே வந்து விழுந்திருக்கிறது.

அச்சத்துடனும் படபடப்புடனும் இருந்த டெய்சி, தனது காதில் இருந்த நண்டு வெளியே வந்ததும் நிம்மதி அடைந்திருக்கிறார்.

Crab Gets Stuck In Woman Ear While Snorkelling

அட்வைஸ்

இதனை அடுத்து கடலில் நீச்சல் அடிக்க செல்பவர்கள், மறக்காமல் காதை அடைத்துக்கொள்ளும்  Ear Plugs -களை பயன்படுத்துமாறு தனது சமூக வலைதள பக்கத்தில் அட்வைஸ் கொடுத்துள்ளார் டெய்சி.

டெய்சி தனது நீச்சல் அனுபவத்தை சோசியல் மீடியாவில் பகிர, தற்போது பலரும் அதுகுறித்து வைரலாக பேசிவருகின்றனர்.

தந்தையை அடக்கம் செய்துவிட்டு வந்த மகன்.. ஒருவாரம் கழிச்சு வீட்டு வாசல்ல நின்ன அப்பா.. அதிர்ந்துபோன கிராம மக்கள்..!

CRAB, WOMAN EAR, SNORKELLING, CRAB GETS STUCK, PUERTO RICO SEA

மற்ற செய்திகள்