'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு 'குட்' நியூஸ்...! ஆனா ஸ்ட்ரிக்டா 'அத' மட்டும் follow பண்ணுவோம்...! - அறிவித்த நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் நுழைவதற்கு செலுத்தியிருக்க வேண்டிய கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு 'குட்' நியூஸ்...! ஆனா ஸ்ட்ரிக்டா 'அத' மட்டும் follow பண்ணுவோம்...! - அறிவித்த நாடு...!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், உருமாறிய கொரோனா வகை காரணமாகவும் பல உலக நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வரும் பயணிக்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்த நிலையில், தற்போது ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் நுழைய செலுத்தி இருக்கவேண்டிய தடுப்பூசிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனம் உருவாக்கியுள்ள அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசி தான் இந்தியாவில் 'கோவிஷீல்டு' என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த தடுப்பூசி, பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் 'அஸ்ட்ரா செனகா' தடுப்பூசியின் பெயர் இடம் பெற்றிருந்ததே தவிர, 'கோவிஷீல்டு' தடுப்பூசியின் பெயர் அதில் இடம்பெறாததால், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு சார்பில் இந்த விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்த நிலையில், பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்களையும் அனுமதிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் பிரதமா் ஜீன் கேஸ்டக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அஸ்ட்ரா செனகாவால் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்கள் வெளிநாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவதற்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

இருப்பினும் தற்போது புதுவகையான டெல்டா வகைக் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக எல்லைகளில் சோதனைகள் கடுமையாக்கப்படும்' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்