"சவாலை ஏற்கிறேன்!".. 'டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்' கேட்டதற்காக களத்தில் இறங்கும் 'இவாங்கா டிரம்ப்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப், கொரோனா தடுப்பு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் சவாலை ஏற்றுக்கொண்டார்.

"சவாலை ஏற்கிறேன்!".. 'டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்' கேட்டதற்காக களத்தில் இறங்கும் 'இவாங்கா டிரம்ப்'!

முன்னதாக போலியோ போன்ற தொற்று நோய்களுக்கு உலகம் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொண்டதை சுட்டிக்காட்டிய இவாங்காவிடம், அந்நிகழ்ச்சி நேரலையில் கேள்வி எழுப்பிய தொலைக்காட்சி தொகுப்பாளர், இவாங்கா தடுப்பு மருந்தை ஏற்றால் தானும் ஏற்பதாக கூறியதை அடுத்து அந்த சவாலை இவாங்கா ஏற்றுக் கொண்டார்.

கொரோனா தடுப்பு மருந்து குறித்து தொடர்ந்து அமெரிக்காவில் எதிர்க்கட்சியினர் எழுப்பி வரும் சந்தேகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இவங்கா இந்த சவாலை ஏற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்