'இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!!'.. நாட்டு மக்களை எச்சரித்த சுகாதார செயலர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில் தலைநகர் லண்டனில் புதிய கட்டுப்பாடுகளை ஒரு சில நாட்களுக்குள் எதிர்கொள்ளக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

'இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!!'.. நாட்டு மக்களை எச்சரித்த சுகாதார செயலர்!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்தும் விஷயத்தில் கவனமுடன் செயல்படும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரிட்டனில் சமீப நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

Covid19: more curbs will be there UK Health Secretary warns people

இதனால் தலைநகர் லண்டனில் ஊரடங்கு முதலான கடுமையான சட்டங்கள் கொண்டு வரத்தான் வேண்டும் என்று சுகாதார செயலாளர் Matt Hancock ஒப்புக்கொண்டுள்ளார்.  இந்நிலையில் தலைநகர் லண்டனில் என்ன நடவடிக்கை தேவை என்பது குறித்து லண்டன் மேயருடன் வார இறுதியில் பேசியதாககக் கூறிய அவர்,  லண்டன் அலுவலக ஊழியர்களுக்கு அடுத்த வாரம் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான யோசனை எழுந்து, அப்படி ஒரு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டால் அதை நிராகரிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். கொரோனா அதிகரித்து வருவதால் மிகவும் தாமதமாக இருப்பதை விட விரைவாக செயல்படுவது நல்லது என்று எச்சரித்த அவர்,  இந்த 7 நாட்களில் 1 லட்சம் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Covid19: more curbs will be there UK Health Secretary warns people

இதுபற்றி லண்டன் மேயரின் செய்தி தொடர்பாளர் கூறும்போது நிலைமை தெளிவாக மோசமாக மோசமடைந்து வருவதாகவும், எனினும் சபை தலைவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு லண்டனுக்கு குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்