“இப்படியே போனா வேலைக்கு ஆகாது... போடுறா லாக்டவுன!”... டிசம்பர் வரை ஊரடங்கு நீட்டிப்பை ‘அதிரடியாக’ அறிவித்த ‘அதிபர்!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு உலக அளவில் 6.01 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 14.1 லட்சம் பேர் உயிரிழந்துமுள்ளனர். ஜெர்மனியில் இதுவரை, 9.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  15 ஆயிரம் பேர் உயிரிழந்துமுள்ளனர்.

“இப்படியே போனா வேலைக்கு ஆகாது... போடுறா லாக்டவுன!”... டிசம்பர் வரை ஊரடங்கு நீட்டிப்பை ‘அதிரடியாக’ அறிவித்த ‘அதிபர்!’

இதனால் கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து தம் நாட்டு அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய அதிபர் ஏஞ்செலா மெர்கல் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “ஜெர்மனியில் நவம்பர் இறுதி வரை தொடர்ந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் டிசம்பர் 20ந்தேதி வரை நீட்டிக்கப்படும். புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடையும்பட்சத்தில்,  ஜனவரி தொடக்கத்திற்கு முன் சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம்” என கூறியுள்ளார்.

அவர் கூறியதன்படி, கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் இருந்தால், ஜனவரி ஆரம்பத்தில் கூட கட்டுப்பாடுகள் நீடிக்கும்.  ஆனால் ஜனவரியில் 1 லட்சம் பேருக்கு 50 பேர் என்ற (ஒரு வாரத்தில்) எண்ணிக்கைக்கும் கீழே தொற்றுகள் குறையாவிடில் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்